
அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி அவரிடம் படிக்கும் மாணவிகள் 4 பேரிடம் பல்கலைக்கழக உயர் அதிகாரிகளுக்கு பாலியல் ரீதியாக ஒத்துழைப்பு தரும்படி போனில் அழைப்பு விடுத்த ஆடியோ சமீபத்தில் வெளியானது. தமிழகத்தையே உலுக்கிய இந்த விவகாரத்தில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் செயல்பாடுமீது பல்வேறு அரசியல் கட்சியினர் சந்தேகம் எழுப்பி வருகின்றனர். அதையடுத்து நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், “இவ்விவகாரத்தில் தன் மீதான குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது. இதில் வெளிப்படையான விசாரணை நடத்தப்படும். அந்தப் பேராசிரியை நிர்மலாதேவி யாரென்றே எனக்குத் தெரியாது’ என்றும் தெரிவித்தார் இந்நிலையில் தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் பேராசிரியை பின்னணியில் பசுந்தோல் புலிகள் யார் யார் என்பதை கண்டறிய வேண்டும்நிர்மலாதேவி விவகாரத்தில் நீதிமன்றமே தாமாக முன்வந்து விசாரணைக்குழுவை அமைக்க வேண்டும்இதுபோன்ற செயல்களில் யாரும் ஈடுபடக்கூடாத வகையில் நிர்மலாதேவிக்கு தண்டனை வழங்க வேண்டும்



