சென்னை: தினகரன் தரப்பு 18 சட்ட மன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு வரும் சனிக்கிழமை வெளியிட வாய்ப்பு உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
முன்னதாக, இன்று முதலில், சட்டமன்றத்தில் ஜெயலலிதா படத்தை அகற்றக் கோரி திமுக தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு வெளியாகிறது.
அதைத் தொடர்ந்து, ஓபிஎஸ் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் 11 பேர் தகுதி நீக்க வழக்கு குறித்த தீர்ப்பு வெளியாகிறது. இதனால், சென்னை உயர்நீதிமன்ற வளாகமே பெரும் பரபரப்புடனும், கூட்ட நெரிசலுமாகக் காணப்படுகிறது.
முக்கிய இரு வழக்குகளில் தீர்ப்பு வழங்க உள்ளதால் நிரம்பி வழிகிறது நீதிமன்ற வளாகம். அதிமுக, திமுக வழக்கறிஞர்கள் ஒரு புறம் என்றால், சட்டக்கல்லுரி மாணவர்கள் ஒரு புறத்தில் குவிந்துள்ளனர்.