சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, சென்னை மெரினாவில் அய்யாக்கண்ணு 90 நாள்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதி கோரினார். அவருக்கு ஒரு நாள் மெரினாவில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதி தந்த தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தது சென்னை உயர் நீதிமன்றம்.
காவிரி விவகாரத்தில் அய்யாக்கண்ணு போராட மாற்று இடத்தை தேர்வு செய்தால் அனுமதிப்பது குறித்து பரிசீலனை செய்வதாக உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, உண்ணாவிரதப் போராட்டத்துக்கு அனுமதி அளித்து, உத்தரவு பிறப்பித்த நீதிபதியின் உத்தாவுக்கு எதிராக மேல் முறையீடு செய்தது தமிழக அரசு. தமிழக அரசின் மேல் முறையீட்டில் உயர் நீதிமன்றம் இந்த இடைக்காலத் தடையை விதித்தது.