கோவில்பட்டி: முதல்வருக்கு கருப்புக் கொடி காட்டப் போவதாக சிலர் கூறுகின்றனர். அவர்களை காவல் துறை கவனித்துக் கொள்ளும் என்று சூசகமாகத் தெரிவித்தார் அமைச்சர் கடம்பூர் ராஜு.
கோவில்பட்டியில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூா்.செ. ராஜு செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அவர், ஜல்லிக்கட்டு என்ற தமிழா் உணா்வுப் போராட்டத்தில் வெற்றி பெற்ற போல், தமிழா் உாிமைப் போராட்டமான காவிாி மேலாண்மை வாாியம் அமைக்கும் வரை இந்த அரசு ஓயாது என்றார். மேலும், மத்திய அரசு நீதிமன்றத்தில் என்ன வாதம் வைத்தாலும் இறுதி முடிவு நீதி மன்றம் தான் எடுக்க வேண்டும்.
அதிமுகவும் தமிழக அரசும் நம் நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாகத் தெரிவித்தார். சட்டம் ஒழுங்கு திமுக ஆட்சிக் காலத்தில் தான் கெட்டுப் போய் இருந்தது என்றும், காவல் துறையினரைப் பாதுகாக்கும் அரசு இந்த அரசுதான் என்றும் கூறிய கடம்பூர் ராஜு, கோவில்பட்டி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு சிலா் கருப்புக்கொடி காட்டப்பேவதாக தொிவித்துள்ளனா்.
முதல்வா் கட்சி நிகழ்ச்சிக்கு வரவில்லை. மக்கள் நலத்திட்ட நிகழ்ச்சிக்கு தான் வருகிறாா். முதல்வருக்கு கருப்புக்கொடி காட்டுபவா்களை காவல்துறை பாா்த்துக் கொள்ளும் என்றார்.