பாவூர்சத்திரம் காவல்நிலையத்தில் பணியில் இருந்த தலைமை காவலர் விஷம் அருந்தியதால் பரபரப்பு
பாவூர்சத்திரம் காவல்நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வருபவர் அல்போன்ஸ் (45).
பாவூர்சத்திரம் செல்வ விநாயகர்புரத்தில் வசித்து வரும் இவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். கணவன், மனைவிக்கு இடையே குடும்பத்தகராறு இருந்தாக கூறப்படுகிறது
இன்று (செவ்வாய் ) மாலை அல்போன்ஸ் பணியில் இருந்த போது அவரது மனைவி மற்றும் மகன்கள் காவல்நிலையம் வந்து கணவருடன் தகராறு செய்தார்களாம்.
அப்போது காவல்நிலையத்தின் பின்புறம் சென்ற அல்போன்ஸ் விஷம் குடித்தாராம். ஏற்கனவே இதே காவல் நிலையத்தில் பணிபுரிந்த காவலர் நடராஜன் ஒரு பெண்ணோடு தனிமையில் இருந்த விவகாரம் குறித்து இவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தியதாக தெரிகிறது ,
அதுதான் குடும்ப தகராறு கராணமாக அல்லது அந்த சம்பவத்திற்கும் இதற்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமா ? என்கிற பல கேள்விகள் காவலர் மத்தியில் எழுத்துள்ளது
,ஆபத்தான நிலையில் இருந்த அவரை பாவூர்சத்திரம் உதவி ஆய்வாளர்கள் வாசுதேவன், ராஜரத்தினம் மற்றும் போலீஸார் சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.