ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் தீவு பகுதியில் உள்ள வால் முனையான தனுஷ்கோடி பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை விதிக்கப் பட்டுள்ளது.
கடல் சீற்றத்தால் சுற்றுலா பயணிகள் தனுஷ்கோடி செல்ல தடை விதிக்கப் பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
கடற்பகுதியில் சூறைகாற்று மற்றும் கடல் சீற்றத்தால் சுற்றுலா பயணிகள் தனுஷ்கோடி செல்ல தடைவிதித்துள்ள மாவட்ட நிர்வாகம், அனைத்து வாகனங்களும் புதுரோடு வரை மட்டுமே செல்ல அனுமதி அளித்துள்ளது.




