Homeஉள்ளூர் செய்திகள்ஐபிஎல்., போராட்டத்தில் போலீஸாரை ரவுண்டு கட்டிய ‘சீமான்’ கட்சி பிரமுகர் கைது!

ஐபிஎல்., போராட்டத்தில் போலீஸாரை ரவுண்டு கட்டிய ‘சீமான்’ கட்சி பிரமுகர் கைது!

police attack 1 - Dhinasari Tamil

சென்னையில் ஐபிஎல் போட்டிகளை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டத்தின்போது, போலீஸாரை ரவுண்டு கட்டித் தாக்கிய சீமானின் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த மதன்குமார் என்பவரை போலீஸார் கைதுசெய்தனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் இழுத்தடித்த மத்திய அரசைக் கண்டித்து சென்னையில் ஐபிஎல்., போட்டிகள் நடத்தப் படக் கூடாது என்று சினிமா இயக்குனர்கள், திரைத்துறையினர், திமுக.,வினர், நாம் தமிழர் கட்சியினர் என எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பலரும் இணைந்து போராட்டங்களை நடத்தினர். போட்டியைக் காண வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களை ஓட ஓட விரட்டி அடித்தனர். பெண் ரசிகைகளின் மஞ்சள் நிற சட்டையைக் கழற்ற வைத்து கேவலப் படுத்தினர்.

அப்போது, பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாரை நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த பிரமுகர் ஒருவர் கண்மூடித் தனமாகத் தாக்கினார். இந்த வீடியோ அப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவியது. இந்தச் சம்பவத்துக்கு நடிகர் ரஜினிகாந்த்தும் தனது கண்டனத்தைப் பதிவு செய்தார். போலீஸ்காரர்களைத் தாக்குவது எத்தகைய காட்டுமிராண்டித் தனம் என்பதை தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், கண்மூடித்தனமாக போலீஸாரைத் தாக்கியவர் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர்தான் என்பது கண்டறியப்பட்டது. இந்நிலையில், போலீஸாரைத் தாக்கிய நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த மதன்குமார் என்பவரை திருவல்லிக்கேணி போலீஸார் இன்று கைதுசெய்துள்ளனர்.

Most Popular

உரத்த சிந்தனை :

ஆன்மிகம்..!

Follow Dhinasari on Social Media

18,078FansLike
375FollowersFollow
52FollowersFollow
74FollowersFollow
1,969FollowersFollow
17,300SubscribersSubscribe

சமையல் புதிது..!

மக்கள் பேசிக்கிறாங்க

COMPLAINT BOX | புகார் பெட்டி :

2 COMMENTS

  1. இப்ப என்ன சொல்ல போறீங்க ஆமை கறி சீமான், உன்னை மாதிரி பொருப்பற்ற தலைமை இருந்தால் தொண்டர்கள் எப்படி இருப்பார்கள், அடி, குத்து என்று பேசுவது , சபையில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று தெரியாமல் மற்றவர்களை ஓருமையில் வசைபாடுவது என இருந்தால் தொண்டர்கள் அப்படி தான் இருப்பார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nineteen − 18 =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Cinema / Entertainment

அகண்டா: தியேட்டரைத் தொடர்ந்து ஓடிடியிலும் சாதனை!

கொரானோ முதல் அலை வந்த பிறகு புதிய திரைப்படங்களை நேரடியாக ஓடிடி தளங்களில் வெளியிடும்...

வைரமுத்து வாரிசா..? சர்ச்சையான பா ரஞ்சித் ட்விட்!

அட்டக்கத்தி படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான பா.ரஞ்சித் அதன் பின்னர் தொடர்ச்சியாக...

இரயில் நிலையத்தில் இறந்து கிடந்த புஷ்பா பட நடிகை!

புஷ்பா படத்தின் 'ஏ சாமி' பாடலில் நடனமாடிய நடிகை ஜோதி ரெட்டி ரயில் நிலையத்தில்...

கண்டுபிடியுங்கள்.. கஸ்தூரி வைத்த போட்டி!

நடிகை கஸ்தூரி முதன்முறையாக தனது மகனின் படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். சின்னவர், அமைதிப்படை, இந்தியன் என...

Latest News : Read Now...