இன்று 95ஆவது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார் திமுக., தலைவர் மு.கருணாநிதி. இதை ஒட்டி அவருக்கு வாழ்த்து தெரிவித்து, பேனர்கள் வைத்து, போஸ்டர்கள் ஒட்டி தொண்டர்கள் சென்னை மட்டுமல்லாது பல ஊர்களிலும் அமர்க்களப் படுத்தி வருகின்றனர்.
சென்னையில் உள்ள போயஸ் கார்டனில் (பின்னி சாலையில்) வரலாற்றில் முதல் முறையாக கருணாநிதிக்கு போஸ்டர் ஒட்டியிருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அண்ணா சாலையில் இருந்து கடற்கரை செல்லும் பிரதான சாலையில் இடப்புறம் திரும்பினால் கோபாலபுரம் – கருணாநிதி வீடும், வலப்புறம் திரும்பினால் அருகிலேயே ஜெயலலிதா வசித்த போயஸ் கார்டன் வேதா இல்லமும் இருக்கிறது குறிப்பிடத் தக்கது.




