சென்னை: நெஞ்சுவலி ஏற்பட்ட ஜெயலலிதாவைக் காப்பாற்ற 40 நிமிடம் போராடியதாக மருத்துவர் ரமா வாக்குமூலம் அளித்துள்ளார்.
தமிழகத்தின் முதல்வராக இருந்த ஜெயலலிதா உடல் நலக் குறைவால் அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த 2016 டிசம்பர் 5ம் தேதி காலமானார். அவரது மரணத்தில் சந்தேகம் உள்ளது என்று குற்றச்சாட்டுகள் கூறப்பட்டதால், அதுகுறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒரு விசாரணை ஆணையத்தை அரசு அமைத்தது.
ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில், ஜெயலலிதா தொடர்புடைய பலரும் வாக்குமூலம் அளித்து வருகின்றனர். இந்நிலையில், ஜெயலலிதாவுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டபோது சிகிச்சை அளித்த மருத்துவர் ரமா நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் முன் ஆஜராகி வாக்குமூலம் அளித்துள்ளார்.
2014 டிச.4ஆம் தேதி ஜெயலலிதாவுக்கு தாம் சிகிச்சை அளித்ததாக ரமா கூறியுள்ளார். மேலும், நெஞ்சுவலி ஏற்பட்ட ஜெயலலிதாவை காப்பாற்ற 40 நிமிடம் போராடியதாக ரமா வாக்குமூலம் அளித்துள்ளார்.
Posts by Senkottai Sriram:
- சோகமான நாள்; திபெத், நேபாளத்தை உருக்குலைத்த திடீர் வெள்ளம், நிலச்சரிவு! அதிகரிக்கும் உயிரிழப்புகள்!
- காணாமல் போன நயா பைசா கணக்கு!
- Videsi se Desi: A New Era of Secure and Aatmanirbhar Digital Communication!
- அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!
- தாம்பரம் – செங்கோட்டை சிறப்பு ரயில்; ஜன.26 ஸ்பெஷல்!



