செப்.1ல் தமிழகம் முழுதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

Published:

Election Commission - 2026

வருகின்ற 01.09.2018 சனிக்கிழமை அன்று தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.

இந்த வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்த்தல் பெயர் நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் ஆகியவை 09.09.18, 23.09.18, 07.10.18 மற்றும் 14.10.18 ஆகிய 4 நாட்கள் அந்தந்த பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் *வாக்காளர் சிறப்பு முகாம் காலை 9:30 முதல் மாலை 5:30 வரை நடைபெற உள்ளது.

இதில் 18 வயது நிரம்பிய (31.12.2000 மற்றும் அதற்கு முன் பிறந்திருக்க வேண்டும்) புதிய வாக்காளர்கள் அனைவரும் தங்களுடைய பகுதியில் இருக்கும் வாக்குச் சாவடிக்கு சென்று படிவம்(6) ஐ பூர்த்தி செய்து தங்களை இணைத்து கொள்வதற்காகவும் , பெயர் நீக்கத்திற்கு படிவம் – 7 ம், வாக்காளர் அட்டையில் திருத்தத்திற்கு படிவம் 8 ம், முகவரி மாற்றத்திற்கு படிவம் 8 A வும் , ஏற்கனவே வாக்காளர்களாக உள்ளவர்களும் தங்களுடைய பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என சரி பார்த்துக் கொள்ளவும் இந்த சிறப்பு முகாமை பயன்படுத்தி கொள்ளுமாறு அன்புடன் கேட்டு கொள்ளப்படுகிறது.

ALSO READ:  உங்களால் இந்த தேசத்துக்கு என்ன ஆதாயம் ஏற்படும் என்பதை சிந்தியுங்கள்!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img