பாஜக.,வின் மத்திய அரசுக்கு ஆதரவு… சன் டிவி., கலைஞர் டிவி., திமுக.,வின் பந்த்தில் பங்கேற்கவில்லை!

Published:

kalaignar tv - 2026

பாஜக.,வின் மத்திய அரசுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், பந்த் அறிவித்து அங்கங்கே மறியல் போராட்டங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் திமுக.,வின் அதிகாரபூர்வ வர்த்தக நிறுவனங்களான சன் டிவி., கலைஞர் டிவி., உள்ளிட்ட அதன் சார்பு நிறுவனங்கள் வழக்கம் போல் இயங்குகின்றன. இவை  எதுவும் திமுக.,வின் பந்த்தில் பங்கேற்கவில்லை!

இன்று நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக, பாரத் பந்த் என்று அறிவித்து, அங்கங்கே போக்குவரத்தை முடக்கி, சாலை மறியலில் ஈடுபட்டு வரும் திமுக.,வுக்குச் சொந்தமான வர்த்தக  நிறுவனங்கள் வழக்கம் போல் இயங்குகின்றன என்றும், அவை திமுக.,வின் பந்த் தில் பங்கேற்காமல், மத்திய அரசுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் வழக்கம் போல் இயங்குவதாகவும் சமூக வலைத்தளங்களில் கிண்டலும் கேலியும் தூள் பறக்கின்றன.

திமுக., காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நாட்டு மக்களை அவர்களின் வர்த்தகம் பாதிப்படையும் விதத்தில் தூண்டிவிட்டுக் கொண்டு, தங்களின் வர்த்தக நிறுவனங்களை வழக்கம் போல் இயக்குவதாக குற்றச்சாட்டைக் கூறுகின்றனர் சமூக வலைத்தளவாசிகள்!

ALSO READ:  விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

Related articles

Recent articles

spot_img