சிசிடிவி கேமராக்களை நிறுவவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி சென்னை பெருநகர காவல்துறையின் சார்பில் நடிகர் விக்ரம் நடித்த மூன்றாவது கண் குறும்படம் வெளியிடப்பட்டுள்ளது.
நாட்டில் அதிகரித்து வரும் குற்றச்சம்பவங்களில் குற்றவாளிகளை அடையாளம் காண்பதிலும், குற்றங்கள் நடக்காமல் தடுப்பதிலும் சிசிடிவி கேமராக்கள் முக்கிய பங்காற்றி வருகின்றன.
இதனால் இவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் சென்னை காவல்துறையினர் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
அந்தவகையில், நடிகர் விக்ரம் நடித்த ‘மூன்றாவது கண்’ என்ற பெயரில் விழிப்புணர்வு குறும்படம் இன்று வெளியிடப்பட்டது.
சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் வெளியிட முதல் பிரதியை நடிகர் விக்ரம் பெற்றுக்கொண்டார்.



