சென்னை: சென்னையில் பள்ளி கல்லூரிகள் இன்று வழக்கம் போல் இயங்கும் என்று கூறப் பட்டுள்ளது.
சென்னையில் கடந்த சில தினங்களாக மாலை நேரங்களில் லேசான மழை பெய்து வருகிறது. அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருப்பதால் தமிழகம் மற்றும் கேரளாவுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து சென்னையில் உள்ள பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை விடப்பட்டது. ஆனால், திடீரென சென்னையில் இன்று பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும். விடுமுறை கிடையாது என மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் தெரிவித்துள்ளார்.
இது பெற்றோர்களை பெரிதும் குழப்பத்தில் ஆழ்த்தியது. நேற்று பள்ளிகளில் இருந்து மாணவர்களின் பெற்றோர்க்கு குறுஞ்செய்தி மூலம் பள்ளி விடுமுறை என அறிவித்துவிட்டு, திடீரென பள்ளிகள் இன்று உண்டு என்று கூறியதால் மாணவர்கள் பெரும் அவதிக்கு உள்ளாயினர்.
புதுச்சேரியில் மழையால் பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை விடப் பட்டுள்ளது. புதுச்சேரியில் கனமழை காரணமாக பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.




