திருப்பூரில் இருந்து முத்தூர்க்கு கடந்த நவ.8 ஆம் தேதி திருமணத்திற்காக, பனியன் கம்பெனி நிறுவனரும் அவர் தம்பி மகனும் 120 கி.மீ வேகத்தில் பிஎம்டபிள்யு காரில் வந்துள்ளனர். காரை தம்பி மகன் இயக்கி வந்துள்ளார்.
காங்கேயத்தை கடந்த போது, கார் ஒரு பாம்பின் மீது ஏறியுள்ளது. ஆனால் அவர் அதை கவனிக்கவில்லை. ஏதோ சிறிய குழி என்று நினைத்து வந்து விட்டார். முத்தூர் அருகே வரட்டுக்கரை என்ற ஊர் அருகே வந்த போது, பாம்பு காரின் முன்னால் படம் எடுத்துள்ளது.
இதை கண்டு இருவரும் அதிர்ச்சி அடைந்து வரட்டுக்கரை அருகே தென்னங்கரைப் பாளையம் பிரிவு அருகே வெளிச்சத்தில் நிறுத்தியுள்ளனர்,. பிறகு ஹார்ன் அடித்து ஒலி எழுப்பியுள்ளனர். அப்போது அருகில் உள்ளவர்கள் வந்து பார்த்தனர். இதை அடுத்து, பாம்பு காருக்குள் ஓடி ஒளிந்து கொண்டது.
உடனே தீயனைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் வந்து சுற்று முற்றும் பார்த்து விட்டு, பாம்பு ஓடிவிட்டது என்று சொல்லி சென்று விட்டனர். ஆனால், காரில் வந்த இருவருக்கும் சந்தேகம் ஏற்படவே, எதற்கும் இருக்கட்டுமே என்று BMW கார் நிறுவனத்திற்கே போன் செய்து கேட்டுள்ளனர்.
அதற்கு அந்த நிறுவனம் காருக்குள் எறும்பு கூட போகாது என்றும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் காலையில் காரை கொண்டு வாருங்கள் பார்ப்போம் என்றும் கூறியுள்ளனர்.
இதை அடுத்து, காரை காலையில் கோயமுத்தூர்க்கு கொண்டு சென்றுள்ளனர்! அங்கே பானட்டை கழற்றிப் பார்த்த போது, இடது புற இருக்கை மேட்-க்கு அடியில் நாகம் ஒன்று சுருண்டு படுத்திருந்ததைக் கண்டு லாகவமாக வெளியே எடுத்தனர்.




