திருச்சி விமான நிலையத்தில் ஏர் ஏசியா விமானம் மூலம் செல்ல இருந்த பயணிகளின் உடைமைகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது தனது சூட்கேசில் மறைத்து வைத்திருந்த திருச்சியை சேர்ந்த ரியாஸ் அஹமது என்பவரிடம் ரூ.17.45 லட்சம் வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கோலாப்பூர் செல்ல கொண்டு வந்த சூட்கேஸில் இருந்து டாலர், யூரோ, யென், ஆஸி. டாலர் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து அவரிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.



