IMG 20181126 103203 - 2026மறைந்த திரைப்பட இயக்குனர் கே.பாலசந்தரின் மனைவி ராஜம் (84) சென்னையில் இன்று காலமானார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் 100 க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியவர் கே. பாலசந்தர். இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் காலமானார்

IMG 20181126 103131 - 2026இந்த நிலையில் அவரது மனைவி ராஜம் (84) உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் இன்று காலை 4.30 மணியளவில் உயிரிழந்துள்ளார்.இவருக்கு புஷ்பா கந்தசாமி என்ற மகளும், பிரசன்னா என்ற மகனும் உள்ளனர்.

IMG 20181126 103701 - 2026பாலசந்தரின் மனைவி உடலுக்கு ரஜினி உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending