நான் முந்தி.. நீ முந்தி… போட்டியால் இளம்பெண் சென்ற ஸ்கூட்டர் மீது மோதி… விபத்தை ஏற்படுத்திய தனியார் பஸ்!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் நெல்லை

 

accident palayamkottai - 2026திருநெல்வேலி: நான் முந்தி நீ முந்தி என போட்டி போட்டு தனியார் பஸ்கள் ஓடுவதால், இன்று காலை இளம்பெண் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளது தனியார் பஸ்.

திருநெல்வேலி பாளையங்கோட்டை அருள் நகரைச் சேர்ந்தவர் மரியாள். இவர் தன் குழந்தையை பள்ளியில் விட்டுவிட்டு வரும் போது தூய யோவான் கல்வியல் கல்லூரி அருகே ஹைகிரவுண்டில் இருந்து தறிகெட்டு வேகமாக வந்த வேணி பஸ், மரியாள் வந்த ஸ்கூட்டியில் மோதி இழுத்துச் சென்றது

இதில் தலையில் பலத்த காயமடைந்தார் மரியாள். இந்த விபத்து ஏற்பட்டதும், மரியாள் இறந்துவிட்டதாகக் கருதிய பஸ்ஸின் நடத்துனரும் ஓட்டுனரும் இருவேறு திசைகளில் குதித்துத் தப்பியுள்ளனர். இதைக் கண்டு பொதுமக்கள் கடும் கோபமடைந்துள்ளனர்.

தனியார் பேருந்துகளின் போட்டி காரணத்தால் நெல்லை மாநகர பகுதிகளில் விபத்து அடிக்கடி நடைபெறுவதாக பொது மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஒருவேளை இவற்றை எல்லாம் பொறுத்திருந்துதான் பார்க்குமா காவல் துறை?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.