
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் அமைப்பு செயலாளர் முன்னாள் அதிமுக அமைச்சர் செந்தில் பாலாஜி நாளை திமுகவில் இணைய உள்ளார் என்று செய்திகள் உலா வரும் நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார் அமைச்சர் ஜெயக்குமார்.
நேற்று திமுகவின் ஆ.ராசாவும் செந்தில் பாலாஜியும் விமான நிலையத்திலிருந்து வெளி வருவது போன்ற புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார் உண்மையான அதிமுக தொண்டர்கள் திமுகவில் சேரமாட்டார்கள் என்று கூறினார்.
மேலும், அதே நேரம் நடக்கும் சம்பவங்களை பார்க்கும் போது தினகரனே செந்தில் பாலாஜியை திமுகவிற்கு அனுப்பிவிட்டு பின்னர் ஒவ்வொருவரையும் அனுப்பி விட்டு கடைசியில் தான் இணையலாம் என செயல்படுவது போலவும் தெரிகிறது என்றார் ஜெயக்குமார்.
அப்போது குரங்கு குட்டியை விட்டு ஆழம் பார்க்கிறது என்று கருத்து தெரிவித்தார்.