
தேவ ஊழியர்கள் ஐக்கியம் (கோயம்புத்தூர்) நடத்தும் வெளிச்சத்தை நோக்கி மூன்று நாள் கருத்தரங்கு என்ற பெயரில் ஒரு கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள்!
பிப்ரவரி மாதம் 18 19 20 திங்கள் முதல் புதன்கிழமை வரை கோவை சின்ன வேடம்பட்டி ஆதி அப்போஸ்தல சபை என்ற இடத்தில் இந்த கருத்தரங்கு நடத்த இருப்பதாக நோட்டீஸ்கள் கொடுக்கப்பட்டுள்ளன
சம்பந்தன் இயேசுவின் அன்பை கூறும் சைவம், அவதாரமாக இயேசுவின் மீட்பை கூறும் வைணவம், திரித்துவக் கடவுள் இயேசுவை விளக்கும் திருக்குறள்,சற்குருவான இயேசுவின் கட்டளை கூறும் சித்தர்கள் என.., இந்திய இலக்கியங்களில் ஒளிந்திருக்கும் சத்தியத்தின் மறை பொருளை அறிந்து கொண்டு இந்தியா இன்னும் அதே நிலையில் நற்செய்தியை அறிவிக்க வாஞ்சையும் வாரமும் கொண்ட கடவுளின் ஊழியர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு என்று தகவல் சொல்லி முதலில் பதிவு செய்யும் 100 பேருக்கு மட்டுமே அனுமதி என்றும் அனுமதி கட்டணம் ரூபாய் 300 என்றும் அழைக்கிறார்கள்
மேலும், நம் தேசத்தில் பிற சமயங்கள் மற்றும் அவர்தம் கலாச்சாரங்களின் பின்னணியை அறிந்து தெளிவான சிந்தனையுடன் கருத்துடனும் நற்செய்திப் பணியை சிறப்பாக செய்ய உதவிடும் மகத்தான கருத்தரங்கம் என்று இந்த கருத்தரங்கிற்கு தலைப்பிட்டு அழைத்து இருக்கிறார்கள்
இந்தக் கருத்தரங்கு இப்போது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது! மதங்களுக்கு இடையே கலவரத்தை ஏற்படுத்தக் கூடிய, உள்நோக்கம் கொண்ட சதியாக இந்தக் கருத்தரங்கு திகழ்கிறது என்று எதிர்ப்புகள் எழுந்துள்ளன.
ஹிந்து தர்மத்திற்கு மேலும் ஒரு சவால் ! மோசடியை முறியடிக்க வாரீர் ! என்றும், சைவம் , வைணவம் , சித்தர்கள் , ஆழ்வார்கள் , நாயன்மார்கள், திருக்குறள் என்று அனைத்தையும் கிறிஸ்தவம் என்று மோசடிப் பிரச்சாரம் செய்ய கருத்தரங்கு ! இந்த மோசடிக் குப்பைகளை வருங்காலத்தில் பாடத் திட்டத்திலும் சேர்ப்பார்கள் !
நம் நாட்டின் ஆதாரமான சமயத்தையும் , சமயச் சின்னங்களையும் , பண்பாட்டையும் கிறிஸ்தவமாக்கி , அடியோடு அழிக்கும் சதியை வடிவமைக்கும் தொடர் முயற்சியின் அங்கமாக ஒரு கருத்தரங்கு பிப்ரவரி மாதம் 18 ,19 , 20 தேதிகளில் கோவையில் நடக்கவுள்ளது !
இந்த ஹிந்து அழிப்பு ,தமிழ் அழிப்பு முயற்சியை தடுப்பது நம் கடமை ! சமயத்தையும் தமிழையும் காப்போம் என்றெல்லாம் அறைகூவல்கள் சமூக வலைத்தளங்களில் விடுக்கப் பட்டன.
இந்நிலையில், கோவை, பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகள் இது குறித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,
கோயமுத்தூர் தேவ ஊழியர் ஐக்கியம் என்று சொல்லக்கூடிய அமைப்பு நடத்தக்கூடிய வெளிச்சத்தை நோக்கி என்று சொல்லப்படும் கருத்தரங்கம் நடைபெறுவது குறித்து ஒரு துண்டறிக்கையை நாம் கண்டோம்
அந்த துண்டறிக்கையில் ஆதி அப்போஸ்தல சபை என்று சொல்லப்படும் சபையின் மூலமாக சின்னவேடம்பட்டியில் நடப்பதாக அறிகிறோம்! கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர்கள் ஏற்கனவே திருக்குறளை எழுதிய திருவள்ளுவர் இயேசுவின் கருத்தைத்தான் எழுதி இருக்கிறார் என்று சொல்லி மிகப்பெரிய அளவில் இந்து மக்களிடத்தில் தமிழ் மக்களிடத்தில் மிகப் பெரும் எதிர்ப்பை சம்பாதித்தனர்.
இப்பொழுது அதோடு சேர்த்து இன்னமும் மூன்று பேரை திருஞானசம்பந்தரும் வைணவ ஆழ்வாரும் ஏசுவின் கருத்தைதான் சொல்லியிருக்கின்றார்கள்; சித்தர்களும் ஏசுவின் கருத்தைதான் சொல்லி இருக்கின்றார்கள் என்ற கருத்தை வலியுறுத்தி இந்தக் கருத்தரங்கம் நடைபெறுவதாக அறிகின்றோம்
இது சைவ மக்களின் வைணவ மக்களின் திருக்குறளை கடைபிடிக்கக் கூடிய தமிழ் பெரியோர்களின் தமிழ்ச் சான்றோர்களின் சித்தர் நெறியை கடைபிடிக்கக் கூடிய பெருமக்களின் மனதைப் புண்படுத்துவதாக அமைகின்றது. இது, மிகவும் கண்டனத்திற்குரியது
அரசும் மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் உடனடியாக இதில் தலையிட்டு இந்தக் கருத்தரங்கைத் தடுத்து நிறுத்த வேண்டும்! நம் சமயங்கள் மிகப் பழமையானது! கல்தோன்றி மண்தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த சமயமாக இருக்கக்கூடிய நம் சமூகத்தில் இருந்துதான் அனைத்து சமயங்களும் தோன்றின என்பது வரலாறு
எனவே இவர்களின் இந்த முயற்சியை நாம் கண்டிக்கின்றோம்! இதேபோல் நம் அகில பாரத துறவிகள் சங்கத்தின் சார்பாகவும் எங்கள் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கின்றோம்! நம்முடைய சிவனடியார்கள் வைணவ அடியார்கள் சார்பாகவும் கண்டிக்கின்றோம்!
மாவட்ட நிர்வாகமும் காவல் துறையும் மாநகராட்சி நிர்வாகமும் உடனடியாக தலையிட்டு இதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம்! – என்று கூறியுள்ளார்.
அவரது வேண்டுகோளின் காணொளி வடிவம் இங்கே…