சென்னை, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ஆர்.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பது… விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 8 குழந்தைகள் இருதினங்களில் அடுத்தடுத்து இறந்திருப்பது மனதை ரணப்படுத்தும் வேதனை சம்பவமாகும். அரசு மருத்துவமனைகளில் ஏழை எளிய மக்களின் உயிர் இழப்பது தொடர்வது வருத்தத்திற்குரியதாகும். இனிவருங்காலங்களிலாவது இத்தகைய சம்பவங்கள் நிகழாதிருக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்வதோடு, குழந்தைகள் உயிரிழப்பு சம்பவம் குறித்து உரிய குடும்பங்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவிகள் புரியவேண்டும் என்றும் இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் தமிழ்நாடு அரசை கேட்டுக்கொள்கிறேன். மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விழுப்புரம் மருத்துவ கல்லூரி மருத்துவனை முன்பாக 20–4–2015 அன்று (இன்று) இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தேசியக்குழு உறுப்பினர் பி.பத்மாவதி, மாவட்டச் செயலாளர் ஏ.வி.சரவணன் தலைமை தாங்குகிறார்கள் என்று கூறியுள்ளார்.
Popular Categories



