தமிழகத்தில் மகாபாரதம்! திமுக, அமமுக சகுனி கும்பல்! அதிமுக பாண்டவர்கள்!

Published:

02 May29 Jayakumar - 2026

தமிழகத்தில் மகாபாரத யுத்தம் நடந்து வருகிறது. திமுக., அமமுக., ஆகியன சகுனி கும்பல் என்றும், தாங்கள் பாண்டவர்கள் என்றும் சொல்லியிருக்கிறார் தமிழக மீன் வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார்.

அமமுக  மற்றும் திமுக நினைப்பது எதுவும் நடக்காது என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் நேற்று கூறினார்.

சென்னை விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், வேலூரில் கைப்பற்றப்பட்ட பணம் என்னுடையது என்பதை நிரூபிக்க முடியுமா என்று திமுக பொருளாளர் துரைமுருகன் கேட்டுள்ளார்! கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை! அந்தப் பணம் துரைமுருகனுக்கு சொந்தமானதுதான்!

அரசு கொறடா அளித்த புகாரில் தினகரனுக்கு ஆதரவு தெரிவித்த அதிமுகவை சேர்ந்த 3 எம்எல்ஏக்கள் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுத்து வருகிறார்

நீதிமன்றத்திற்கு செல்ல மாட்டோம் என்று கூறி விட்டு அவர்கள் அங்கேயே சென்றுள்ளனர்! திமுக சகுனி வேலை செய்வது வழக்கம் தான்! துரியோதனன், சகுனி கும்பல் யார் என்பது மக்களுக்கு நன்றாக தெரியும்!

ALSO READ:  வெள்ளை அறிக்கை வெளியிடும் முன்... தேர்தல் அறிக்கையைப் பார்க்கவும்!

விரோதமும் துரோகமும் ஒன்றாகச் சேர்ந்து இருக்கிறது! அதிமுகவும் திமுகவும் சகுனியும் துரியோதனனும் சேர்ந்த கும்பல்!

அமமுக., திமுக., நினைத்தது நடக்காது! நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலிலும் சட்டமன்ற இடைத் தேர்தலிலும் அதிமுக வெற்றி பெற்று தமிழக மக்களின் தேவைகளை அவசியம் பூர்த்தி செய்வோம் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

Related articles

Recent articles

spot_img