ஆசன வாயில் வெடிப்பா?
சில குழந்தைகளுக்கு ஆசனவாய், பக்கவாட்டிவ் வெடிப்புகள்
ஏற்பட்டு சிரமப்படும். அதற்கு மாசிக்காயை நன்றாகக் கல்லில் உரைத்து அதில் சிறிது வெண்ணெயைக் கலந்து ஆசனவாயில் தடவி வர இரண்டொரு நாளில் சரியாகி விடும்.
இளமையுடன் இருக்க…
நாள்தோறும் சாப்பிட்ட பிறகு இரண்டொரு நெல்லிக்காய்களை மென்று தின்று வாருங்கள். அத்துடன் திளம் ஒரு முறை ஒரு சிட்டிகை
கடுக்காய்ப் பொடியையும் சாப்பிட்டு வந்தால் எப்பொழுதும் நிகு
நிகுவென்று இளமையுடன் வாழலாம். நெல்லிக்காய், எலுமிச்சம்பழம், தக்காளிப்பழம் இவற்றில் வைட்டமின் சி சத்து உள்ளது. இவற்றை அளவோடு அடிக்கடி இவற்றை சேர்த்துக் கொள்ள இளமையுடன் வாழலாம். *
இளம்பிள்ளை வாதத்திற்கு…
இரும்புச் சட்டியை அடுப்பிலேற்றி 12 அவுன்ஸ் வேப்பெண்ணெயை விட்டு சூடானதும் 20 கிராம் நார் எடுத்து மயிலிறகை ஓடித்துப் போட உருகி விடும். பிறகு 15 கிராம் சாம்பிராணித்தூள் போட புகை வரும். உடனே 10 கிராம் கற்பூரத் தூளைப் போட்டு மத்தால் கடையவும். இந்த எண்ணெயை தினமும் ஓர் அவுன்ஸ் பசும்பாவில் உள்ளுக்குக் கொடுத்து வர குணம் தெரியும்.
இரத்த காயத்துக்கு…
வெட்டுக்காயம் ஏற்பட்டு இரத்தம் கொட்டிக் கொண்டிருந்தால் துடைத்துவிட்டு அருகம்புல். அரிவாள் மூக்குப் பச்சிலை இரண் டையும் சமமாக எடுத்து அரைத்து காயத்தில் வைத்துக்கட்ட வடியும் இரத்தம் நிற்பதுடன் காயமும் விரைவில் ஆறும்.
நாயுருவி இலையை ஒரு பிடி எடுத்து கொஞ்சம் ஈரவெங்காயம் சேர்த்து நசுக்கி வெட்டுக்காயம், அடிபட்ட காயம் இவற்றுக்கு வைத்துக் கட்டி வர சீழ் பிடிக்காமல் இரண்டொரு நாள்களில் ஆறி விடும்.
இழுப்பு குணமாக…
குழந்தைகளுக்கு இழுப்பு நோய் வந்தால் உடனே வெங்காயத்தை நசுக்கி ஒரே ஒரு துளி சாறு கண்ணில் விட்டால் இழுப்பு நின்று விடும்.
ஆடாதொடை இலையின் சருகுகளைக் கத்தரித்து சுருட்டுபோல் சுருட்டிப் புகை பிடித்தால் இழுப்பு, இருமல் நின்று தாராளமாய் மூச்சு விட முடியும்.
இரத்த மூலம் குணமாக..
காரம் சாப்பிடுவதை அடியோடு நிறுத்த வேண்டும். வெங்காய, பொடியாக நறுக்கி நெய்யில் வதக்கி சாப்பிடலாம். இதனுடன் பனங்கற்கண்டையும் சேர்த்து சாப்பிட்டால் இன்னும் நல்லது. உடனே இரத்த மூலம் குணமாகும்.
சேராங்கொட்டையை ஊசியினால் குத்தி நல்லெண்ணெய் விளக்கில் காட்டினால் கருநிறமுடைய தைலம் வடியும். இதை சேகரித்துஇரண்டு துளிகளை 200 மி.லி. பசும்பாலில் விட்டு, ஒரு ஸ்பூன் நெய்யையும் சேர்த்து காலை மாவை நேரங்களில் தொடர்ந்தாற்போல் ஐந்து நாள்கள் சாப்பிட இரத்த மூலம், கிரந்தி (சிபிலிஸ்) காக்கை வலி போன்ற நரம்புக் கோளாறினால் வரும் வியாதிகள் அனைத்தும் நீங்கும். இது சாப்பிட்டு வரும் பொழுது பத்திய உணவையே உட்கொள்ள வேண்டும்.
கிரந்தி நாயகம் (படாஸ் செடி) இவைகளை அரைத்து காலை, மாலை கச்சக்காய் அளவு பசும்பாவில் கொடுத்து வர நான்கைந்து நாள்களில் இரத்தப் போக்கு நின்று விடும்.
வாழைப்பூவை தனியாகவோ அல்லது துவரம்பருப்புடன் சேர்த்தோ சமையல் செய்து சாப்பிட்டு வர அது இரத்த மூலத்தை குணமாக்குவ துடன், தாது பலத்தையும் உண்டாக்கும்.
உலர்ந்த வேப்பம் விதைகளின் உள்ளிருக்கும் பருப்பை நசுக்கி வெல்லத்துடன். சாப்பிட்டு வர மூல வியாதி குணமாகும்.
பிரண்டையை ஒரு சட்டியில் நெய் விட்டு வறுத்து அரைத்து காலை. மாவை கோலி குண்டளவு சாப்பிட இரத்தப்போக்கு நிற்கும்.