கேழ்வரகு இனிப்பு அடை
தேவையானவை:
கேழ்வரகு மாவு – ஒரு கப்,
வெல்லம் – முக்கால் கப்,
தேங்காய் துருவல் – கால் கப், ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன்,
நெய்யில் வறுத்து பொடித்த முந்திரி – 2 டேபிள்ஸ்பூன்,
நெய் – தேவையான அளவு.
செய்முறை:
வெல்லத்துடன் சிறிதளவு நீர் சேர்த்து கொதிக்கவிட்டு, வடிகட்டி, மீண்டும் அடுப்பில் வைத்து சிறிது நேரம் கொதிக்கவிடவும். வெல்லக் கரைசல் சற்று கெட்டியானதும், அதனுடன் தேங்காய் துருவல் சேர்க்கவும். பிறகு கேழ்வரகு மாவு, ஏலக் காய்த்தூள், பொடித்த முந் திரி சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.
வாழை இலையில் நெய் தடவி, மாவை சற்று கனமான அடைகளாக தட்டி, தோசைக்கல்லில் போட்டு, இருபுறமும் நெய் விட்டு வேகவிட்டு எடுக்கவும்.