நாரத்தை இலை ரசம்
தேவையானவை:
நாரத்தை இலை – 6,
கொத்தமல்லித் தழை – ஒரு கைப்பிடி அளவு,
பச்சை மிளகாய் – 2,
பூண்டு – 4 பல்,
கடுகு, சீரகம் – தலா கால் டீஸ்பூன், மிளகுத்தூள் – 2 டீஸ்பூன்,
சீரகத்தூள் – ஒரு டீஸ்பூன்,
கறிவேப்பிலை – 2 ஆர்க்கு,
எலுமிச்சம்பழச் சாறு – 2 டேபிள்ஸ்பூன், உப்பு, எண்ணெய் – சிறிதளவு.
செய்முறை:
நாரத்தை இலை, கொத்தமல்லித் தழை, பச்சை மிளகாய், பூண்டு ஆகியவற்றை ஒன்றிரண்டாக பொடித்து வைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, சீரகம் போட்டு தாளிக்கவும். இதில் பொடித்து வைத்த கலவையை சேர்த்து லேசாக வதக்கி, 3 கப் நீர் சேர்க்கவும். பிறகு, மிளகுத்தூள், சீரகத்தூள், கறிவேப்பிலை, உப்பு சேர்த்து 3 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கி, எலுமிச்சம்பழச் சாறு சேர்த்துப் பரிமாறவும்.