December 6, 2025, 11:57 AM
26.8 C
Chennai

10 நாட்களில் ஆட்சியை மாற்றிக்காட்டுவேன்; துரைமுருகன் சவால்…!

duraimurugan - 2025

அரவக்குறிச்சி  உள்பட 22 தொகுதிகளிலும் தி.மு.க. வெற்றி பெற்றால் 10 நாட்களில் தமிழகத்தில் ஆட்சியை மாற்றி காட்டுவேன் சவாலுக்கு முதல்வர் தயாரா?..என. துரைமுருகன் பேச்சியுள்ளார்.

கடந்த மாதம் 18 ம் தேதி, மக்களவைத் தேர்தலுடன் 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்து முடிந்துள்ளது.

மேலும், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டபிடாரம், சூலூர் ஆகிய 4 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில், வேட்பாளர்கள் மற்றும் கட்சியினரின் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

தமிழகத்தில் ஆட்சியை தீர்மானிக்கும் தேர்தலாக இந்த இடைத்தேர்தல் இருக்கும் என்பதால், வீதி,வீதியாக சென்று மக்களை நேரடியாக சந்தித்து ஓட்டு வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

வேலாயுதம்பாளையத்தில் அரவக்குறிச்சி தி.மு.க. வேட்பாளர் செந்தில் பாலாஜியை ஆதரித்து தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடந்தது. இதில் கட்சியின் பொருளாளர் துரைமுருகன் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது, இந்த கூட்டத்திற்கு பெண்கள் அதிகம் வந்துள்ளதை பார்க்கும்போதே நமக்கு வெற்றி உறுதி என்பது தெரிகிறது என்றார். நீங்கள் என்ன மந்திரியா? இந்த கூட்டத்திற்கு வருமாறு செந்தில்பாலாஜி என்னை அழைக்கும் போது, வீடற்ற 25 ஆயிரம் பேருக்கு தலா 3 சென்ட் நிலம் வழங்குவதாக கூறினார்.

நீங்கள் என்ன மந்திரியான்னு கேட்டேன், உடனே அவர் தனது சொந்த நிதியில் நிலம் வழங்குவதாக கூறினார். மக்களுக்கு செய்ய வேண்டிய மந்திரிகளே செய்யாத போது இப்படி ஒரு வேட்பாளரை நான் இதுவரை பார்த்தது இல்லை. 11 முறை தேர்தலில் நின்ற நானே இவரிடம் பாடம் படிக்கனும் போல் உள்ளது.

அவர் சிறந்த நிர்வாக திறமை உள்ளவராக இருப்பதால்தான் அவரை தி.மு.க.விற்கு அழைத்து வந்து விட்டோம். கருணாநிதி இலவச மின்சாரத்தை தந்தார். அதை ஜெயலலிதா ரத்து செய்ய முயற்சித்தபோது நாங்கள் போராடி அத்திட்டத்தை காப்பாற்றி வைத்துள்ளோம்.

துரைமுருகன் என்பது தனிப்பட்ட சக்தி அல்ல. கட்சியின் பொருளாளர், சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவராகவும், பல தேர்தல்களையும் சந்தித்தவன் என்ற முறையில் சொல்கிறேன்.

இந்த தேர்தலில் அதிகப் படியான சட்டசபை தொகுதிகளில் வெற்றி பெற்றால் 25 நாளில் ஆட்சியை மாற்றிக்காட்டுவேன் என்று சொன்னால் முதல்வருக்கு கோபம் வருகிறது.

முதல்வருக்கு சவால் இப்போதும் சொல்கிறேன். அரவக்குறிச்சி தொகுதி உள்பட 22 தொகுதிகளிலும் தி.மு.க. வெற்றி பெறும் பட்சத்தில் 10 நாட்களில் ஆட்சியை மாற்றிக்காட்டுவேன்.

இந்த சவாலுக்கு முதல்வர் தயாரா? என்று கேள்வி எழுப்பி உள்ளார். மேலும், நாங்கள் கருணாநிதியின் சொல்லுக்கு கட்டுப்பட்டு இதுவரை நடந்து வருகிறோம் என்றும் கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories