கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்தில் 98 ஆண்டு பழமை வாய்ந்த திருவிதாங்கூர் மன்னர் காலத்து பள்ளி புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணியின் போது சுவரில் பிரிட்டிஷ் அரசின் சின்னமான சிங்கம் பொரித்த உருவம் கண்டுபிடிக்கப் பட்டது. இதனை ஏராளமானோர் பார்வையிட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அரசு உதவிபெறும் பள்ளி எஸ்.எம்.எஸ்.எம் மேல்நிலைப் பள்ளி. இது 1920ஆம் ஆண்டு திருவதாங்கூர் சமஸ்தான அரசர் ஶ்ரீ மூலம் திருநாள் அரசரின் 60 ஆவது பிறந்த நாள் நினைவாக கட்டப்பட்டது .
நூற்றாண்டை எட்டும் இந்தப் பள்ளியில் மராமத்துப் பணிகள் நடைபெற்று வருகின்றன! பள்ளியின் முன்புறம் உள்ள கட்டடத்தின் மேல் சுவரில் வண்ணம் பூச சுரண்டி புதுப்பிக்கும் போது பிரிட்டிஷ் அரசின் சின்னமான சிங்கம் பொரித்த உருவம் தெரிந்தது. இதை அடுத்து, கல்வி. நிர்வாகம் அதை பாதுகாக்க நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது.
தற்போதய காலகட்டத்தில் இது போன்ற சின்னங்களை பார்ப்பது மிக அரிது என்பதால் ஏராளமான பொதுமக்கள் அதனை வந்து பார்த்துச் செல்கின்றனர்.