
தமிழகத்தில் காதல் மற்றும் கள்ளக்காதல் சம்பவங்களில் உயிர் பலிகள் அதிகரித்து வருகிறது.
காமம் உயிர் வளா்க்கும் முறைதவறிய காமம் உயிர் பலி வாங்கும் காமத்தல் உருவாகும் கரு சந்நததிகளை உருவாக்கும் முறைதவறிய காமத்தால் கருவில் உருவான ஏதுமறிய அப்பாவி சந்ததிகள் உயிர் பலியாகும் கொடுமைகள் உச்சத்தை எட்டிக்கொண்டெ வருகிறது. அப்படி ஒரு நிகழ்வு நம்மை கண்கலங்க செய்கிறது.
தொட்டியம் உல்லாசத்திற்கு தடையாக உள்ளதாக கருதி தான் பெற்ற மகளை கள்ளக்காதலனுடன் சேர்ந்து ஆசிரியை அடித்து கொன்றுள்ளார்.
திண்டுக்கல்லை சேர்ந்தவர் பிரசன்னா (42). தனியார் நிறுவன விற்பனை பிரதிநிதிவேலை செய்து வருகிறார். இவரது மனைவி நித்யகமலா(32). திண்டுக்கல்லை சேர்ந்த இவர், எம்.எஸ்.சி. படித்துள்ளார். இவர்களுக்கு லத்திகா (5) என்ற மகள் இருந்தாள்.
இந்நிலையில் பிரச்சனாவுக்கும் நித்யகமலாவுக்கும் அடிக்கடி ஏற்பட்டு வந்த குடும்ப தகராறு காரணமாக 3 வருடங்களுக்கு முன்பு இருவரும் பிரிந்தனர். மேலும் இவர்களது விவாகரத்து வழக்கும் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது.
மகளுடன் தனியாக வசித்த நித்யகமலா, தொட்டியத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.
அப்போது நித்யகமலாக்கும் திண்டுக்கல்லை சேர்ந்த முத்துப்பாண்டியன் (37) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இவர் மதுரையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் உடற்கல்வி ஆசிரியராக உள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவி, மற்றும் குழந்தைகள் உள்ளனர்.
இந்தநிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு தொட்டியம் அருகே காட்டுப்புத்தூர் அங்காளம்மன் கோயிலுக்கு முத்துப்பாண்டி நித்யகமலாவையும், லத்திகாவையும் அழைத்துச் சென்றார்.
அந்த பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளனர். வீட்டு உரிமையாளரிடம் நாமக்கல் மாவட்டம் மோகனூரில் வேலை கிடைத்துள்ளதாக கூறியுள்ளார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை லத்திகாயை படுகாயத்துடன் காட்டுப்புத்தூர் அரசு மருத்துவமனைக்கு நித்யகமலா கொண்டு சென்றுள்ளார்.
பின்னர் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால், வழியிலேயே லத்திகா இறந்தாள். இதனிடையே, காட்டுப்புத்தூர் போலீசார் சேலம் சென்று நித்யகமலாவிடம் விசாரித்ததில் லத்திகாவை அடித்து கொடுமைப்படுத்தியது தெரியவந்தள்ளது.
மேலும், சேலம் மருத்துவமனையில் போலீசாரை கண்டதும் முத்துப்பாண்டி தப்பியோடி தலைமறைவானார். இதையடுத்து போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி சேலம் டவுன் பஸ் நிலையத்தில் பதுங்கியிருந்த முத்துப்பாண்டியை சுற்றிவளைத்தனர்
இருவரையும் காட்டுப்புத்தூர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, சம்பவத்தன்று 2 பேரும் அரைகுறை ஆடையுடன் தனிமையில் இருப்பதை லத்திகா பார்த்திருக்கிறாள்
இதனால் அதிர்ச்சியடைந்த நித்யகமலா சிறுமியை அடித்து உதைத்து டி.வி.யை பாரு என்றுகூறி விரட்டி உள்ளார்.
வலிதாங்க முடியாத சிறுமியோ அழுதபடி இருந்துள்ளாள். இதனால், 2 பேரும் ஆத்திரமடைந்து லத்திகாயை வயரால் கடுமையாக அடித்து உள்ளனர். இதில், அவள் படுகாயமடைந்து சிகிச்சை பலனின்றி இறந்தது தெரியவந்தது.
இதையடுத்து, நித்யகமலாவின் முதல் கணவர் பிரசன்னாவை திண்டுக்கல்லில் இருந்து வரவழைத்து விசாரணை நடத்தினர். அவர் அளித்த புகாரின்பேரில், இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்து உள்ளது.



