
திருவாரூர் மன்னார்குடியில் மூதாட்டி ஒருவர் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இரண்டரை பவுண் தங்க நகைக்காக மூதாட்டியை அடித்துக் கொன்று உடலை பெட்ரேல் ஊற்றி எரித்த கொடூரம் நிகழ்ந்துள்ளது. இது தொடா்பாக மூதாட்டியின் பேத்தி உட்பட நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நியூ பைபாஸ் வீதியின் அருகே கருவேலமர புதருக்குள் மூதாட்டி ஒருவர் பாதி உடல் எரிந்த நிலையில் மர்மான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தள்ளது.
இது குறித்து தகவல் கிடைத்த போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை செய்தனா்.
விசாரணையில் இந்தக் கொலை வழக்கில் இரண்டரை பவுண் நகைக்காக மூதாட்டி அடித்துக் கொலைசெய்து உடலை எரித்த கொடூரம் வெளியானது.
தஞ்சை மாவட்டம் மதுக்கூரையடுத்து, புனவஞ்சிக் கிராமத்தைச் சேர்ந்தவர் மாரியம்மாள் வயது 70 இவர் கடந்த 18 ஆம் தேதி மன்னார்குடி மதுக்கூர் வீதியிலுள்ள தனது பேத்தி சுமதி வயது 20 வீட்டுக்கு சென்றுள்ளார்.
அதன் பின் அவரின் சொந்த ஊருக்கு திரும்பி வரவில்லை.
இந் நிலையிலேயே அவர் கருவேலங்காட்டு புதருக்குள் எரித்துக் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார்.
இறந்த மூதாட்டி மாரியம்மாளின் பேத்தி சுமதியின் கணவர் ஆறுமுகம் மற்றும் அவரது உறவினர்கள் சிவக்குமார், பெரியசாமி ஆகியோர் மோட்டார் சைக்களில் மூதாட்டி மாரியம்மாளை கருவேலங்காட்டு பகுதிக்கு அழைத்து வந்து அங்கு வைத்து கிரிக்கெட் மட்டையால் அடித்துக் கொன்றுள்ளனர்.
பின்னர் அவரது கழுத்திலுந்த இரண்டரை பவுண் சங்கிலியை எடுத்துவிட்டு, பனை ஓலைகள் மற்றும் பெட்ரோல் ஊற்றி மாரியம்மாளின் உடலை எரித்துள்ளனர். இந்தக் கொலைக்கு மாரியம்மாளின் பேத்தி சுமதியும் உடந்தையாக இருந்தது போலீஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து சுமதி உட்பட நான்கு பேரையும் போலீஸார் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



