திமுக மக்களவை குழு தலைவராக டி.ஆர்.பாலு ஒருமனதாக தேர்வு!

Published:

IMG 20190525 195721 - 2026திமுக மக்களவை குழு தலைவராக டி.ஆர்.பாலுவும், துணைத்தலைவராக எம்.பி. கனிமொழியும், கொறடா தலைவராக முன்னாள் மத்தியமைச்சர் ஆ.ராசா ஒருமனதாக தேர்வு  செய்யப்பட்டனர்.

நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் போட்டியிட்ட 38 வேட்பாளர்களில் 37 பேர் வெற்றி  பெற்றுள்ளனர்.

IMG 20190525 200055 - 2026இந்த நிலையில், வெற்றி பெற்ற திமுக வேட்பாளர்கள் அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து  வெற்றி பெற்றதற்கான சான்றிதழை காட்டி வாழ்த்து பெற்றனர்.

இந்நிலையில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக எம்பிக்கள் கூட்டம் சென்னை  அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை நடந்தது.

IMG 20190525 195721 1 - 2026கூட்டத்திற்கு திமுக தலைவரும் சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமாகிய மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். இதில் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற திமுக எம்பிக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

IMG 20190525 195601 - 2026இந்த கூட்டத்தில், திமுக நாடாளுமன்ற மக்களவை குழுத் தலைவராக டி.ஆர்.பாலு, மக்களவை குழு துணைத்தலைவராக எம்.பி. கனிமொழி மற்றும் கொறடா தலைவராக முன்னாள் மத்தியமைச்சர் ஆ.ராசா, பொருளாளராக எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், திமுக மாநிலங்களவை குழு தலைவராக திருச்சி சிவா, மாநிலங்களவை கொறடாவாக டி.கே.ஸ் இளங்கோவன் ஆகியோர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர உத்ஸவம் கொடியேற்றத்துடன் தொடக்கம்!

 

Related articles

Recent articles

spot_img