டைரக்டர்ஸ் கிளப் – வாட்ஸ்அப் குழுவின் மூன்றாம் ஆண்டு விழா!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சினி நியூஸ் சினிமா சென்னை லைஃப் ஸ்டைல்

directors club annual da - 2026

டைரக்டர்ஸ் கிளப் என்பது உதவி இயக்குனர்களுக்காக உருவாக்கிய ஒரு வாட்ஸ் அப் குரூப். இதன் மூலம் சினிமா துறை சார்ந்த எந்த சந்தேகங்களையும் தீர்க்கும் வண்ணம் திரைத் துறை சார்ந்த சாதனையாளர்களை தொடர்பு கொண்டு தெளிவுபடுத்திக் கொள்ளலாம்.

அவ்வகையில் திரைத்துறை இயக்குனர்களான A .R முருகதாஸ், S .S .ராஜமௌலி, சந்தோஷ் சிவன் உள்ளிட்ட எண்ணற்ற சினிமா பிரபலங்கள் வளரும் இளம் இயக்குனர்களுக்கு வழிகாட்டியாக இந்த குரூப்பில் இணைந்து அவர்களின் சந்தேகங்களை தெளிவுபடுத்தியுள்ளார். இந்தக் குழுவை மகிழ் திருமேனியின் உதவியாளர் சக்தி என்பவர் வழிநடத்தி செல்கிறார் .

இயக்குநர்களாக சாதிக்க விரும்பும் இளைய தலைமுறைக்கு ஓர் அங்கீகார மேடையாகத் திகழும் டைரக்டர்ஸ் கிளப் வாட்ஸ்அப் குழுவின் மூன்றாம் ஆண்டு விழா சென்னை சாந்தோம் காது கேளாதோர் மேல்நிலைப் பள்ளியில் மே 19 ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00 மணிக்கு நடைபெற்றது.

சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர்கள் சேரன், பாக்கியராஜ், இலன், பார்த்திபன் தேசிகன், கோபி நாயனார், ரியோ,டேனி, அமித் பார்கவ், ஆனந்தி ஒளிப்பதிவாளர் நிரன் சந்தர், தடம் படத்தின் இசையமைப்பாளர் அருண்ராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான பார்வையாளர்களும், உதவி இயக்குனர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.