இந்தியாவை கூறு போட முயற்சிக்கும் செயலை அனுமதிக்க முடியாது பிரிவினையை ஏற்படுத்த முயற்சிக்கும் கூட்டங்களுக்கு அனுமதி வழங்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் கண்டிப்புடன் தெரிவித்துள்ளது
தந்தை பெரியார் திராவிட கழகம் அமைப்பின் நாகை மாவட்ட செயலர் செல்வம் ஒரு மனுவை தாக்கல் செய்தார் அதில் நாகை மாவட்டம் சீர்காழி பஸ் நிலையம் அருகே வட மாநிலத்தவர்களின் வேட்டைக்காடாகும் தமிழகம் என்ற தலைப்பில் இன்று பொதுக்கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
இதில் ராமகிருஷ்ணன் திருமுருகன் காந்தி ஆகியோர் பங்கேற்கின்றனர் இந்த கூட்டத்திற்கு அனுமதி அளிக்கும்படி சீர்காழி காவல் நிலைய ஆய்வாளர் இடம் விண்ணப்பித்தோம். எங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
அவரின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். எங்களுக்கு பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்று உத்தரவிட வேண்டும் – இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது
மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது! அப்போது அரசு தரப்பில் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் நடராஜன் ஆஜரானார்!
தென் மாநிலத்தவர் வட மாநிலத்தவர் இன மக்களிடையே பிரிவினையை தூண்டும் வகையில் கூட்டம் நடத்த முயற்சி செய்வதால் அனுமதி மறுக்கப்பட்டது என்றார்.
அப்போது நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் நம் நாட்டின் சிறப்பம்சமே வேற்றுமையில் ஒற்றுமைதான் வல்லபபாய் படேல் போன்ற பெருந்தலைவர்கள் பாடுபட்டு ஒருங்கிணைந்த இந்தியாவை கூறு போட முயற்சிக்கும் எந்த செயலையும் அனுமதிக்க முடியாது
பிரிவினையை ஏற்படுத்த முயற்சிக்கும் கூட்டங்களுக்கு அனுமதி வழங்க முடியாது என்றார் பின் வேறு தலைப்பில் கூட்டம் நடத்துவது தொடர்பாக நீதிமன்றத்தை அணுகலாம் என தெரிவித்து விசாரணையை வரும் 14ஆம் தேதிக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் ஒத்திவைத்தார்.




