ஹெல்மெட் அணியாவிட்டால் வீடு தேடி சம்மன் வரும் எச்சரிக்கை! கண்காணிப்பு கேமரா காட்சிகள் வாயிலாக போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளின் வீடுகளுக்கு சம்மன் அனுப்பும் திட்டத்தை சென்னை போலீசார் துவக்கியுள்ளனர் !
சென்னையில் குற்றங்களை குறைக்கவும் குற்றவாளிகளை விரைந்து கைது செய்யவும் 2.5 லட்சம் சிசிடிவி கேமராக்களை போலீசார் பொருத்தி இருக்கிறார்கள்
சென்னையைப் பொறுத்தவரை அனைத்து பிரதான சாலைகளிலும் கேமராக்கள் பொருத்தப் பட்டிருக்கின்றன. இதனால் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளை எளிதாக அடையாளம் காண முடியும் என்கிறார்கள் போலிசார்!
தற்போது ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டுவோர் மற்றும் பின் இருக்கையில் அமர்ந்து செல்பவர்கள் மீது போலீசாரின் கவனம் திரும்பியுள்ளது!
சிக்னல்களை மீறுதல், இரு சக்கர வாகனத்தில் 3 பேர் பயணம் செய்தல் என போக்குவரத்து விதிமீறல் ஈடுபடுபவர்களின் படத்துடன் அவர்களின் வீடுகளுக்கு சம்மன் அனுப்பும் திட்டத்தை சென்னை போலீசார் தொடங்கியிருக்கிறார்கள்!
இதுகுறித்து உயர் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்த போது சென்னையில் உள்ள இரண்டரை லட்சம் சிசிடிவி கேமரா பதிவுகளை அந்தந்த பகுதி போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்! அதன் வாயிலாக போக்குவரத்து விதிமீறல் ஈடுபடுபவர்களின் வீடுகளுக்கு சம்பந் அனுப்பும் திட்டத்தை தொடங்கியுள்ளோம். அண்மையில் போக்குவரத்து போலீசாருக்கு அதிநவீன கருவி வழங்கப்பட்டது.
இதில் விதி மீறலில் ஈடுபட்டு வரும் வாகன பதிவு எண்ணை குறிப்பிட்டால் வீட்டு முகவரி, அவர் எத்தனை முறை போக்குவரத்து விதி மீறலில் ஈடுபட்டு உள்ளார், கட்டிய அபராத தொகை எவ்வளவு என அனைத்து விவரங்களும் தெரிந்துவிடும்!
தற்போது சம்மன் அனுப்பிய விவரம், நாடு முழுவதும் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கும் சென்று விடும்! எனவே விதி மீறலில் ஈடுபட்ட வாகன ஓட்டிகள் அபராதம் செலுத்தாமல் நாட்டில் எந்த இடத்திலும் வாகனத்தை ஓட்ட முடியாது!
முதல் கட்டமாக அண்ணாநகர் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள கேமரா காட்சியில் பதிவுகளை ஆய்வு செய்துள்ளோம்!
90,000 பேர் போக்குவரத்து விதிமீறல் ஈடுபட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது! அவர்கள் செலுத்த வேண்டிய அபராத தொகை உள்ளிட்ட விவரங்களுடன் தபாலில் அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது என்றனர்!





