மாநில அளவிலான சதுரங்க போட்டிகள் திருச்சியில் இன்றும், நாளையும் நடக்க உள்ளதாக ஸ்டார் சதுரங்க அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
திருச்சி சமயபுரம் அருகேயுள்ள பழூர் பாலா வித்யா மந்திர் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் இன்றும், நாளையும் மாநில அளவிலான சதுரங்க போட்டி நடக்க உள்ளது.
இதில், 7,9,11,15 வயது கொண்ட குழந்தைகள் பங்கேற்கலாம். இவர்களுக்கு தனித்தனியாக பொதுப் பிரிவுகளில் போட்டிகள் நடக்கும். இதுகுறித்த மேலும் விபரங்களுக்கு 9043427661 மற்றும் 9080181709 என்ற மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.



