December 6, 2025, 1:08 PM
29 C
Chennai

காஷ்மீரில் இனி பிற்பட்ட சமுதாயத்தினருக்கு இடஒதுக்கீடு கிடைக்கும்: ஹெச்.ராஜா

delimitation jammu kashmir - 2025

காஷ்மீரில் இனி பட்டியல் மற்றும் பிற்பட்ட சமுதாயத்தினருக்கு இட ஒதுக்கீடு கிடைக்கும் என்று பாஜக., தேசிய செயலர் ஹெச்.ராஜா கருத்து தெரிவித்துள்ளார்.

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப் பிரிவு 370 இன்று ரத்து செய்யப் படுவதாக நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்தார்.

அவரது இந்த அறிவிப்பு, பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் பெரும்பாலானவர்கள் பட்டாசு வெடித்து இனிப்பு அளித்து கொண்டாடினார்கள். இந்நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக., தேசிய செயலர் ஹெச்.ராஜா, இன்று தான் ஜம்மு காஷ்மீரில் சமூக நீதி நிலைநாட்டப் பட்டுள்ளது. இனி ஜம்மு காஷ்மீரில் பட்டியல் சமுதாயத்தினர் மற்றும் பிற்பட்ட சமுதாயத்தினருக்கு இட ஒதுக்கீடு கிடைக்கும்.. என்று தெரிவித்துள்ளார்.

அவரது டிவிட்டர் பதிவில்…

பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டிய நம் இந்தியாவின் உண்மையான சுதந்திர தினம் இன்றுதான். ஒரே நாடு ஒரே தேசீயக்கொடி என நிரூபித்த வாழ்வின் நிஜ ஆண்மகன்களுக்கு என் வணக்கங்கள். ஜெய்ஹிந்த். என்று குறிப்பிட்டுள்ளார் எஸ்.வி.சேகர்.

தற்காலிக சட்டத்தை வைத்து 70 ஆண்டுகள் ஆண்டபோது வராத கேள்வி, பல்லாயிரக்கணக்காண இந்து பண்டிட்கள் காஷ்மீரைவிட்டு விரட்டப்பட்ட போது கேட்காத கேள்வி யை இப்போது கேட்டால் தேசத்துரோகி என அழைப்பதில் தவறில்லை. ஒரே இந்தியா. ஒரே கொடி. JAI HIND. ????????????????????????????????இனி இதுவே நிரந்தரம்.

காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டிருப்பதற்கு, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்????????????. வழக்கம் போல (தேச துரோக)எதிர்ப்புக்குரல் எழுப்பி பாகிஸ்தான் கருத்துக்கு ஆதரவு அளித்தார். இனி வருவது வந்து சேரும்.

பாஜக வின் மூன்று அடிப்படைக் கொள்கைகளில் ஒன்று இன்று நிறைவேற்றப்பட்டது. மறைந்த ஷியாம பிரசாத் முகர்ஜியின் ஆன்மா சாந்தியடைட்டும்…அவரது தியாகத்திற்கு மதிப்பளிக்கப்பட்டது – என்று குறிப்பிட்டுள்ளார் பாஜக.,வின் வானதி சீனிவாசன்.

அவர் தமது டிவிட்டர் பதிவில், 1989 மற்றும் 90 களில் ABVP யின் காஷ்மீர் தொடர்பான போராட்டங்களை ஒருங்கிணைத்தது,கருத்தரங்கம், குழு விவாதம், காஷ்மீர் மாணவர்கள் தமிழகம் முழுக்க சுற்றுப்பயணம், “பந்த்” தின் போது நான் பாகிஸ்தான் கொடியை எரித்தது என காலை முதல் ஞாபகங்கள் அலையடிக்கிறது.90 களில் ABVP முன்னெடுத்த #காஷ்மீர்சலோ #kashmirchalo போராட்டத்தில் தமிழகத்திலிருந்து மாணவிகள் கலந்துகொள்ள முடியவில்லை…எனது தம்பி கலந்துகொண்டான்.உதம்பூர் வரை போராட்டகுழு சென்றது..இன்று @BJP4India  NGS @PMuralidharRao  அன்று இந்த போராட்டத்திற்கு பொறுப்பாளர் என நினைக்கிறேன்…. – என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories