வைகோ பதவி பறிபோகுமா ? அவதூறு வழக்கில் இன்று தீர்ப்பு !

Published:

vaiko 3 - 2026
file pic

மதிமுக எம்பி வைகோ மீது திமுக தொடர்ந்த அவதூறு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. எம்பி, எம்.எல்.ஏக்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றம் வைகோ மீதான வழக்கில் இன்று தீர்ப்பு வழங்குகிறது.

2006ல் திமுக சார்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீது அவதூறு வழக்கு போடப்பட்டது. கடந்த 2006-ம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு எதிராக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் ஒன்றை அனுப்பினார். அதில் மதிமுக கட்சியை திமுக உடைக்க பார்க்கிறது. மதிமுகவினருக்கு பணம் கொடுத்து கருணாநிதி எங்கள் தொண்டர்களை திமுக பக்கம் இழுக்கிறார். இதனால் அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதிமுக சார்பாக மனு கொடுக்கப்பட்டது.

VIKOO 2 - 2026
file pic

வைகோ அளித்த இந்த மனு அப்போது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு எதிராக திமுக தரப்பில் உடனடியாக சென்னை ஹைகோர்ட்டில் அவதூறு வழக்கு தொடுக்கப்பட்டது. ஆனால் இதை விசாரிக்க கூடாது, உடனே தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வைகோ சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் வைகோவின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

ALSO READ:  தாம்பரம் - தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்!
st viko - 2026
file pic

இதையடுத்து வைகோவிற்கு எதிரான அவதூறு வழக்கு கடந்த 13 வருடங்களாக எம்பி, எம்.எல்.ஏக்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றம் மூலம் விசாரிக்கப்பட்டது.

court - 2026
file pic

இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் சில நாட்களுக்கு முன்பு நிறைவு பெற்றது. இதையடுத்து இன்று காலை இந்த வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது. இந்திய தண்டனை சட்டத்தின் அவதூறு பரப்புதல் சட்டப்பிரிவு, 499 மற்றும் 500 கீழ் இரண்டு வருடம் வரை அதிகமாக தண்டனை வழங்க முடியும்.

chennai court - 2026
file pic

இதனால் இந்த வழக்கில் இன்று வைகோவிற்கு இரண்டு வருடம் தண்டனை கிடைத்தால் அவரின் ராஜ்ய சபா எம்பி பதவி பறிபோகும். திமுக மூலம்தான் தற்போது வைகோ எம்பியாக இருக்கிறார். அவர்கள் மூலமே வைகோ பதவி பறிபோகும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த வழக்கில் இன்று என்ன தீர்ப்பு வழங்கப்படும் என்று பெரும் எதிர்பார்ப்பு அனைவருக்கும் உள்ளது.

ALSO READ:  தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

Related articles

Recent articles

spot_img