அன்னம் பாலிக்கும் அந்தணர்கள்! பாமரர் பசி போக்கும் பண்டிதர்கள்!

Published:

chidambaram dikshidars seva - 2026

சிதம்பரம், தில்லை தீட்சிதர்கள் ஏழைகளுக்கு வீடு வீடாகச் சென்று அன்னதானம் வழங்கினர்.

உலக நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தி வரும் கரோனா வைரஸ் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. நாடு முழுவதும் கரோனா காரணமாக ஏப்ரல் 14 வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு அமலில் உள்ளதால் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அடித்தட்டு மக்கள் வருவாய் இன்றி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமலும், கடுமையான விலையேற்றம் காரணமாகவும் அடித்தட்டு மக்கள் உணவுக்குத் தவித்து வருகின்றனர்.

இதனால் பல்வேறு இடங்களிலும் வறிய மக்களுக்கு, வசதியுள்ளவர்கள் தங்களால் இயன்ற உதவியைச் செய்து வருகின்றனர். அந்த வகையில், சிதம்பரம் நடராஜர் கோயில் பொது தீட்சிதர்கள், அப்பகுதி மக்களுக்கு உணவு, கபசுரக் குடிநீர் உட்பட பல்வேறு உதவிகளை வழங்கி வருகின்றனர். இன்று மதியம் ஏழை மக்கள் வசிக்கும் கோவிந்தசாமி தெருப் பகுதிக்கு அன்னதானமும் வழங்கினார்கள்.

சமைக்கப்பட்ட உணவை வாகனத்தில் ஏற்றிச் சென்ற தீட்சிதர்கள், அப்பகுதியில் வீடு வீடாகச் சென்று வழங்கினர்.

ALSO READ:  சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!
chidambaram dikshidars2 - 2026
சிதம்பரம் நடராசர் கோயில் அர்ச்சகர்கள் செய்யும், அன்னதானம்! நெருக்கடியான நேரத்தில், பசித்தோர்க்கு உணவு, பரம்பொருளுக்கு செய்யும் பூசனை போலத்தான்

சிதம்பரம் தீட்சிதர்களின் பேருதவி!: சிதம்பரம் கோயில் தீட்சிதர்கள், கோயில் திறந்திருந்தால் தான் இவர்களுக்கு வருமானம்..தங்கள் நிலையே கேள்விக்குறியான போதும் தங்களால் முடிந்ததைச் செய்வோம் என்று ஏழைகளுக்கு அன்னதானம் செய்கிறார்கள்…

தமிழ் மக்களைத் திட்டியே ஈ.வெ.ரா சம்பாதித்த பல நூறு கோடிகளை மணியம்மையைக் கைக்குள் போட்டுக் கொண்டதன் மூலம் ஆட்டையைப் போட்டு , இன்று பல ஆயிரம் கோடி ரூபாய் சொத்துக்களின் மீது அமர்ந்திருக்கும் வீரமணி யாருக்காவது ரெண்டு இட்லி வாங்கிக் கொடுத்திருப்பானா?

எப்போதும் ஏழைகளுக்காக கண்ணீர் வடித்து உண்டியல் தூக்கி வசூல் செய்து , தேர்தல் நேரத்தில் திமுகவிடம் 25 கோடி ரூபாய் கமிஷன் பெற்ற கம்யூனிஸ்ட்கள் யாருக்காவது ஒரு பொறை வாங்கிக்கொடுத்தார்களா?

ஆசியப் பணக்காரர் வரிசையில் இருக்கும் மாறன் குடும்பம் இன்னும் ஒரு பைசா அவிழ்க்க வில்லை… மாறாக , தங்கள் ஊடகம் மூலம் மக்களிடையே பீதியைத் தூண்டுவதே முழுநேர வேலையாக இருக்கிறார்கள்..

நாடு முழுவதும் பம்பரமாகச் சுழன்று ஏழைகள் பசியாற்றுகிறது ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் துணை அமைப்புகள், அத்தனையும் நம்மைப் போன்ற எளியவர்கள் கொடுக்கும் பொருட்களைக்கொண்டு…

ALSO READ:  தாம்பரம் - தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

கஷ்ட காலத்தின் தான் நல்லவர்களை அடையாளம் காண முடியும்..நாம் நிச்சயம் இந்த நெருக்கடியிலிருந்து மீண்டு வருவோம்… இதற்குப் பிறகாவது நமக்கு உதவுவது யார் , நம்மிடம் கொள்ளையடிப்பது யார் என்பதை தமிழர்கள் புரிந்து கொள்ளாவிட்டால் விடிமோட்சமே கிடையாது.

annam anthanar - 2026

இதே மர்ம நபரோ, பாவாடையோ செய்திருந்தால் ஊடகங்கள் தலையில் வைத்து கொண்டாடும்.! மோடி கிச்சன் திருச்சி.! தினமும் 6000 நபர்களுக்கு பார்வையற்ற, தொழுநோயாளிகளின் வீடுகளுக்கும் தேடிச் சென்று உணவு சேர ஆக்கமும் ஊக்கமும் அளித்து வருகிறார் இவர்.

#அன்னம்_பாலிக்கும்_அந்தணர்

Related articles

Recent articles

spot_img