images 9 - 2026

ஆர்.எஸ்.எஸ். நேற்று வந்த இயக்கம் அல்ல…தனி மனிதர்களால் அதை ஒழிக்க முடியாது-மத்திய மந்திரி எல் முருகன்.

சென்னை
images 9 - 2026

ஆர்.எஸ்.எஸ். நேற்று வந்த இயக்கம் அல்ல…தனி மனிதர்களால் அதை ஒழிக்க முடியாது காமராஜர் ஆட்சி காலம் தமிழ்நாட்டில் பொற்காலமாக இருந்தது. பணிபுரியும் இடங்களை பராமரிக்க தூய்மை இந்தியா 2.0 இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. என சென்னையில் மத்திய மந்திரி எல் முருகன் இன்று தெரிவித்துள்ளார்.

மகாத்மா காந்தி பிறந்த தினம் மற்றும் காமராஜர் நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை கிண்டியில் உள்ள தலைவர்களின் நினைவிடத்தில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை இணை மந்திரி எல். முருகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது,

தேசத்தலைவர்களை போற்றும் விதமாக சுதந்திரத்தின் அமிர்த பெருவிழாவை கொண்டாடி வருகிறோம். சுதந்திர தின நூற்றாண்டு விழாவை நோக்கி நமது நாடு வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது, 100 வது சுதந்திர தினத்தில் அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பெற்ற நாடாக இந்தியா மாறுவதற்கான ஒட்டுமொத்த நடவடிக்கைகளும் தொடங்கப்பட்டுள்ளன.

ஏழைக் குழந்தைகள் கல்வி கற்பதற்காக மதிய உணவு திட்டத்தை காமராஜர் கொண்டு வந்தார். காமராஜர் ஆட்சி காலம் தமிழ்நாட்டில் பொற்காலமாக இருந்தது. மகாத்மா காந்தி பிறந்த தினத்தில் காதி துறையை ஊக்குவிக்கும் பொருட்டு அனைவரும் காதி பொருட்களை வாங்க வேண்டும். மகாத்மா காந்தியின் தூய்மையை பேண வேண்டும் என்ற கொள்கையை போற்றும் விதமாக தூய்மை இந்தியா இயக்கம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதில் முதல் கட்டமாக வீடுகள், சுற்றுப்புற பகுதிகளை தூய்மையாக வைத்திருத்தலை தொடர்ந்து, இரண்டாவது கட்டமாக நாம் பணிபுரியும் அலுவலகங்களை சுத்தமாகவும் தேவையற்ற பொருட்களை அகற்றி சிறப்பாக பராமரிக்கவும் தூய்மை இந்தியா 2.0 இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.

நேருவே ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை ஒழிக்க நினைத்தார், ஆனால் முடியவில்லை, தனி மனிதர்களால் ஆர்எஸ்எஸ்-ஐ ஒழிக்க முடியாது. ஆர்.எஸ்.எஸ். நேற்று வந்த இயக்கம் அல்ல. பல லட்சம் தொண்டர்கள் தியாகம் செய்து உருவாக்கப்பட்ட இயக்கம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.