- Advertisements -
Home அரசியல் ரூ.200 கோடி லஞ்சம்; ஸ்டாலின் மீது அண்ணாமலை வைத்த நேரடி குற்றச்சாட்டு!

ரூ.200 கோடி லஞ்சம்; ஸ்டாலின் மீது அண்ணாமலை வைத்த நேரடி குற்றச்சாட்டு!

அதில் திமுக கட்சியினர் மற்றும் அமைச்சர்கள் சொத்துகள் குறித்தும், அமைச்சர்களின் தகவல்கள், செய்திகளின் படங்கள் இடம்பிடித்திருந்தன.

#image_title
- Advertisements -
dmk list would be released by bjp annamalai

சென்னை பாஜக., மாநிலத் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் திமுக கட்சியினர் மற்றும் அமைச்சர்கள் சொத்துகள் குறித்தும், அமைச்சர்களின் தகவல்கள், செய்திகளின் படங்கள் இடம்பிடித்திருந்தன.

தொடர்ந்து முழுமையான தகவல்களெல்லாம் https://enmannenmakkal.com/ என்னும் இணையதளத்தில் இருக்கின்றன என்று தெரிவித்தார். இது அவர்களின் சொத்து மற்றும் அதன் மதிப்புகள் அடிப்படையில் உருவாக்கப்பட்டது எனவும் அண்ணாமலை தெரிவித்தார்.

தற்போது வெளியிட்டிருப்பது முதல் பாதி மட்டுமே. விரைவில் இரண்டாம் பாகம் வெளியாகும்” என்றும் அண்ணாமலை தெரிவித்திருக்கிறார். தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்த அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் ஊழல் பட்டியலும் வெளியிடப்படும் என பாஜக தலைவர் தெரிவித்தார்.

- Advertisements -

முதல்வர் ஸ்டாலின் குடும்பத்தினர் அமைச்சர்களுக்கு யாருக்கு எவ்வளவு சொத்து ?
பட்டியல் வெளியிட்டார் அண்ணாமலை –

தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை இன்று ஆளும் தி.மு.க., ஆட்சியாளர்களின் சொத்து பட்டியலை வெளியிட்டார். இதில் திமுக.,வினரின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் யார் எவ்வளவு சொத்து வைத்துள்ளனர் என்ற விவர பட்டியலையும், ஊழல் விவரத்தையும் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார். மேலும் முதல்வர் ஸ்டாலின் ரூ.200 கோடியை இரு ஷெல் நிறுவனத்திடம் இருந்து லஞ்சமாக பெற்றுள்ளார் என்ற திடுக்கிடும் தகவலையும் வெளியிட்டார். இதனால் முதல்வர் ஸ்டாலின் அதிர்ச்சியில் உறைந்துள்ளார்.

இன்று தமிழக பா.ஜ., தலைமை அலுவலகமான கமலாலயத்தில் அண்ணாமலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். இந்த பேட்டியில் அவர் கூறியதாவது : . ஏனோ தானோ என்று இந்த புகாரை வெளியிடவில்லை. பூதகண்ணாடி கொண்டு பாருங்கள், 21 ம் தேதி மீண்டும் பத்திரிகையாளர்களை சந்திக்கிறேன். அந்நாளில் கேள்வி பதில் வைத்து கொள்வோம்.

வீடியோவில் வெளியான சொத்து விவரம் பட்டியல் வருமாறு:

ஜெகத்ரட்சகன் – ரூ.50 ஆயிரத்து ,219.37 கோடி

எ.வ.வேலு – ரூ.5,442.39 கோடி

கே.என்.நேரு – ரூ.2,495.14 கோடி

கனிமொழி- ரூ.830.33 கோடி

கலாநிதிமாறன் – ரூ.12,450 கோடி

டிஆர் பாலு – ரூ.10,841.10 கோடி

துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் – ரூ.579.58 கோடி

கலாநிதி வீராசாமி – ரூ.2,923.29 கோடி

பொன்முடி மற்றும் கவுதம் சிகாமணி – ரூ.581.20 கோடி

திமுக கட்சியின் சொத்து மதிப்பு – ரூ.1,408.94 கோடி

அன்பில் மகேஷ் பொய்யாமொழி ரூ.1,023.22 கோடி

உதயநிதி – ரூ.2,039 கோடி

சபரீசன் – ரூ.902.46

ஜி ஸ்கொயர் வருமானம் – ரூ.38,827.70 கோடி

மொத்தம் ரூ.1,343,170,000,000 (ரூ.1,34,317 கோடி)

ஸ்டாலின் ரூ.200 கோடி லஞ்சம்

பின்னர் அண்ணாமலை கூறியதாவது: முதல்வர் ஸ்டாலினுக்கு ரூ.200 கோடிக்கு ஆல்ஸ்டாம் கம்பெனி மூலமாக லஞ்சமாக கொடுக்கப்பட்டுள்ளது. இந்தோ யூரோப்பியன் வென்சர் பிரைவேட் லிமிடெட் என்ற சிங்கப்பூரை சேர்ந்த ஷெல் கம்பெனியும், ஹாங்காங்கை சேர்ந்த குளோபல் கிங் டெக்னாலஜி என்ற ஷெல் கம்பெனியும் தான் 2011ல் தேர்தல் நிதியாக இந்த பணத்தை ஸ்டாலினிடம் லஞ்சமாக கொடுத்துள்ளது. இதனை சிபிஐ இயக்குனரிடம் நானே நேரடியாக புகார் அளிக்க உள்ளேன். இதில் மத்திய அரசின் 15 சதவீத பங்கு இருப்பதால் இதனை சிபிஐ விசாரிக்க முழு உரிமை உள்ளது. இது நம் ஜனநாயகத்திற்கான போராட்டம். ஊழல், லஞ்சம் குறித்து இப்போது கேள்வி கேட்காவிட்டால், தமிழ் சமூகத்திற்கு மிகப்பெரிய கேடு காத்துக்கொண்டு இருக்கிறது… என்று குறிப்பிட்டார் அண்ணாமலை.

- Advertisements -

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eight − 4 =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.