நடிகை திரிஷாவுக்கு இன்று பிறந்த நாள். இதனை முன்னிட்டு, நேற்று முதலே திரிஷாவின் டிவிட்டர் பக்கம் களை கட்டி விட்டது.
திரிஷாவுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்வதற்கு என்றே ஒரு ஹாஷ் டாக் உருவாக்கப் பட்டு, அது டிரெண்டிங்கில் விடப்பட்டது. #HappyBirthdayTrisha என்ற அந்த ஹாஷ் டாக் போட்டு, பலரும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
தொடர்ந்து இந்தத் திரையுலகில் திரிஷாவின் 15 வருட தாக்குப் பிடிப்பு, எப்படி இத்தனை வருடங்கள் பொலிவு குறையாமல், மவுசு குலையாமல் திரிஷா கொடி கட்டிப் பறக்கிறார் என்றெல்லாம் ரசிகர்கள் கேள்விகளைக் கேட்கத் தொடங்கிவிட்டனர்.
திரிஷா நடித்த படங்கள், திரிஷாவுக்கு மிகவும் அம்சமாக அமைந்த டாப் 5 திரைப்படங்கள், திரிஷாவுக்குப் பிடித்த 5 டாப் கதா பாத்திரங்கள் என அவருடைய பக்கத்தில் ஒரு பெரிய பட்டியலே ஓடிக் கொண்டிருக்கிறது.
#HBDSouthQueenTrisha #HappyBirthdayTrisha#TRISHADAY #HBDTrish #HBDTrisha #UNICEFCelebrityAdvocate #HappyBirthdayTrishaKrishnan