#BREAKING | விவி மினரல்ஸ் நிறுவன அதிபர் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது…
வி வி மினரல்ஸ் என்ற தனியார் நிறுவனத்தின் அலுவலகங்கள் உரிமையாளரின் வீடு உள்ளிட்ட இடங்களில் இன்று காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
சென்னை நுங்கம்பாக்கம், திருவான்மியூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதே போன்று நெல்லை தூத்துக்குடி, திசையன்விளை உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட இடங்களிலும் சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
3 ஆண்டுகளாக முறையாக வருமான வரி செலுத்தவில்லை என்பதால் இந்த சோதனை நடைபெறுவதாக கூறப்படுகிறது.
தூத்துக்குடியில் உள்ள V.V. டைட்டானியம் நிறுவனம் உள்ளிட்ட வி.வி.மினரல்ஸுக்கு சொந்தமான 100-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித் துறையினர் அதிரடி சோதனை.




