தேர்தல் நெருங்குவதால் காவல் துறை அதிகாரிகள் இடமாற்றம்

சென்னை:

சட்டசபை தேர்தல் நெருங்கி வருவதால், 3 வருடங்கள் ஒரே பதவியில் உள்ள அதிகாரிகள் அதிரடியாக மாற்றப்படும் நடவடிக்கை தொடங்கி விட்டது. குறிப்பாக தமிழகம் முழுவதும் போலீஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டு வருகிறார்கள். சப்-இன்ஸ்பெக்டர்கள் தொடங்கி, இன்ஸ்பெக்டர்கள், டி.எஸ்.பி.க்கள், சூப்பிரண்டுகள், டி.ஐ.ஜி.க்கள் என்று அனைத்து மட்டத்திலும் வருகிற ஜனவரி 10-ந் தேதிக்குள் மாற்றங்கள் செய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

சென்னையில் இன்ஸ்பெக்டர்களை மாற்றம் செய்ய போலீஸ் கமிஷனர் டி.கே.ராஜேந்திரன், 5 கூடுதல் கமிஷனர்கள் அடங்கிய குழுவை அமைத்துள்ளார். அந்தக் குழுவினர், மாற்றம் செய்யப்பட வேண்டிய இன்ஸ்பெக்டர்கள் பட்டியலை தயாரித்து வருகிறார்கள். இன்னும் ஓரிரு நாட்களில் இன்ஸ்பெக்டர்கள் மாற்றம் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.

இந் நிலையில் ஐ.ஜி.க்கள் கூடுதல் டி.ஜி.பி.க்களாக பதவி உயர்வும், கூடுதல் டி.ஜி.பி.க்கள், டி.ஜி.பி.க்களாக பதவி உயர்வு உத்தரவும் வர இருக்கிறதாம். கூடுதல் டி.ஜி.பி.க்கள் ராதாகிருஷ்ணன், மகேந்திரன், ஜார்ஜ் ஆகியோர் டி.ஜி.பி.க்கள் பதவி உயர்வு பட்டியலில் உள்ளனராம்.

வடசென்னை கூடுதல் போலீஸ் கமிஷனர் பதவி காலியாக உள்ளது. அந்தப் பதவிக்கு வருவதற்கு 3 அதிகாரிகள் கடும் போட்டி போடுகிறார்கள். இதையொட்டி சென்னையில் கூடுதல் போலீஸ் கமிஷனர்கள் மத்தியிலும் மாற்றங்கள் வரலாம் என்று பேசப்படுகிறது.

இதற்கிடையில் சென்னையில் நீண்ட நாட்களாக ஒரே பதவியில் உள்ள உதவி கமிஷனர்கள் 23 பேர் நேற்று இரவு மாற்றப்பட்டனர்.
அவர்களின் விவரம்:-

1. தெய்வசிகாமணி, வண்ணாரப்பேட்டை-சென்னை தெற்கு போக்குவரத்து புலனாய்வு உதவி கமிஷனராக மாற்றப்பட்டார்.
2.மனோகரன், தாம்பரம்-உளவுப்பிரிவு உதவி கமிஷனர்.
3.ஜெயசுப்பிரமணியன், புளியந்தோப்பு-மாதவரம் உதவி கமிஷனராக பொறுப்பு ஏற்பார்.
4.ராஜேந்திரன், சேலையூர்-சென்னை மத்திய குற்றப்பிரிவிற்கு மாற்றம்.
5.கங்கைராஜ், ஆவடி-புளியந்தோப்பு உதவி கமிஷனராக மாற்றப்பட்டார்.
6.நந்தகுமார், கிண்டி-ஆவடி உதவி கமிஷனராக நியமனம்.
7.கருணாநிதி, அண்ணாநகர்-மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனராக பொறுப்பு ஏற்பார்.
8.கமீல்பாட்ஷா, மேற்கு போக்குவரத்து புலனாய்வு-அண்ணாநகர் உதவி கமிஷனராகிறார்.
9.மன்சூர் அலி, பரங்கிமலை-மேற்கு போக்குவரத்து புலனாய்வு உதவி கமிஷனர்
10.சங்கரலிங்கம், மாதவரம்-கிண்டி, உதவி கமிஷனர்.

11.ரவிசேகர், மயிலாப்பூர்-பரங்கிமலை, உதவி கமிஷனர்.
12.முருகைய்யன், மதுவிலக்கு மேற்கு-மயிலாப்பூர், உதவி கமிஷனர்.
13.பீர்முகமது, திருவல்லிக்கேணி- சென்னை மத்திய மதுவிலக்கு உதவி கமிஷனர்.
14.என்.முருகேசன், வில்லிவாக்கம்- போலீஸ் கட்டுப்பாட்டு அறை உதவி கமிஷனர்.
15.ஏ.முருகேசன், அடையாறு-மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனர்.
16.விமலன், உளவுப்பிரிவு-புளியந்தோப்பு, உதவி கமிஷனர்.
17.எஸ்.தர்மலிங்கம், நிலஅபகரிப்பு பிரிவு-போலீஸ் நலப்பிரிவு உதவி கமிஷனர்.
18.கணபதி, நலப்பிரிவு-உளவுப்பிரிவு உதவி கமிஷனர்.
19.அய்யப்பன், வேப்பேரி-பூந்தமல்லி உதவி கமிஷனர்.
20.கே.கே.முருகேசன், கோட்டூர்புரம்- சேலையூர் உதவி கமிஷனர்.
21.செல்வன், உளவுப்பிரிவு- அம்பத்தூர், உதவி கமிஷனர்.
22.தனவேல், மதுவிலக்கு-வில்லிவாக்கம், உதவி கமிஷனர்.
23.கே.கண்ணன், சி.பி.சி. ஐ.டி.-வண்ணாரப்பேட்டை, உதவி கமிஷனர்