மக்கள் நல திட்டங்களை எதிர்க்கும் திமுக.,வுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்!

சென்னை

03 June25 Minister Jayakumar - 2026

மக்கள் நலத் திட்டங்களை எதிர்க்கும் திமுக.,வுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என்று கூறினார் அமைச்சர் ஜெயக்குமார்.

செய்தியாளர்களிடம் பேசிய ஜெயகுமார், மேலும் கூறிய போது, கூட்டணிக்கு ஆள் பிடிக்கும் வேலையை திமுகதான் செய்து வருகிறது; அதிமுக அல்ல என்றார். மேலும்,  மக்கள் நல திட்டங்களை எதிர்க்கும் திமுக.,வுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என்றார்.

முன்னதாக, தமிழக அரசின் சார்பில் நலிவடைந்த ஏழைகளுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

இந்நிலையில், தமிழக மக்களுக்கு 2000 ரூபாய் கொடுக்க கூடாது என திமுக மனு தாக்கல் செய்தது. முற்பட்ட சமூகத்திற்கு 10% இடஒதுக்கீடு க்கு எதிராக வழக்கு தொடுத்தார் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி. இன்று, தமிழக அரசு 2000 ரூபாய் மக்களுக்கு வழங்க தடை விதிக்க வேண்டுமென தேர்தல் ஆணையத்தில் மனு கொடுத்தார்.

இந்நிலையில், இன்று, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில், தினேஷ் பாபு என்பவர் தாக்கல் செய்த பொது நல மனு, நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப் பட்டது.

இதை அடுத்து, மக்கள் நல திட்ட விரோதி திமுக என்று சமூக வலைத்தளங்களில் கருத்துகள் பரவி வருகின்றன. மேலும், #மக்கள்_நல_திட்ட_விரோதி_திமுக என்ற ஹேஷ் டேக் பிரபலமடைந்து வருகிறது.

ரூ.2 ஆயிரம் சிறப்பு நிதி உதவி திட்டத்தை தடுத்த நிறுத்த வேண்டும்! என்று  தலைமை தேர்தல் ஆணையத்தில் திமுக சார்பாக புகார் மனுவை அளித்தார், திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி!  அவர் இது குறித்துக் கூறிய போது, வாக்குகளை பெறுவதற்காகவே பணம் என வைகை செல்வன் கூறியதாக மனுவில் தகவல் அளித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.