காவிரி: உழவர் அமைப்பு சார்பில் ஏப்.11ல் முழு அடைப்புப் போராட்டம்!
தமிழ்நாட்டில் 5 கோடி மக்களின் ஆற்று நீர் உரிமைகளுக்காக ஏப்ரல் 11-ஆம் தேதி நடைபெறவுள்ள முழு அடைப்புப் போராட்டம் தமிழகத்தின் மிகப்பெரிய வாழ்வாதாரப் போராட்டம் ஆகும். இதில் அரசியலுக்கோ, வேறு கருத்து வேறுபாடுகளுக்கோ இடமில்லை; நாம் அனைவரும் தமிழர்கள்; காவிரி உரிமையை மீட்டெடுக்க வேண்டியது நமது கடமை
’அந்த’ மருந்துக் கடையை மூடி எதிர்ப்பு தெரிவிச்சா… சரியா இருக்கும்!
இதனிடையே, ’அந்த மருந்துக் கடை’களை அதாவது, டாஸ்மாக் விற்பனையகங்களை ஒரு நாள் மூடி, அரசு தனது எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும் என்றும், இந்த தண்ணிக்காக, அந்த தண்ணி கடையை மூடுங்க என்றும் சமூக வலைத்தளங்களில் பலரும் பரவலாக கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்!
ரயில் முன் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை
இருவரின் காதலுக்கும் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் இருவரும் தற்கொலை செய்துகொண்டார்களா, அல்லது வேறு ஏதேனும் பிரச்னை காரணமா என்று காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
பாதை பராமரிப்பால் குருவாயூர் ரயில் தாமதம்; அவதியுற்ற பயணிகள்!
திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே மணப்பாறை பகுதியில் ரயில் பாதை பராமரிப்பால், குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் நடுவழியில் சுமார் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக நிறுத்தப் பட்டது. இதனால் பயணிகள் பெரிதும் அவதியுற்றனர்.
காவிரி பிரச்னையில் மத்திய மாநில அரசுகளை கண்டித்து திமுக தீர்மானம்!
சென்னை: தி.மு.க. தலைமைச் செயற்குழு அவசரக் கூட்டம் மார்ச் 30 இன்று காலை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஏழு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. அவை...
காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தை நாட முடிவு: ஜெயக்குமார்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத, மத்திய அரசுக்கு கண்டனம் எதுவும் தெரிவிக்கப்படுமா என செய்தியாளர்கள் கேட்டபோது, தீர்ப்பு நிறைவேற்றப் படவில்லை என்றால் தீர்ப்பை கொடுத்தவர்களிடம் செல்வதுதான் சட்ட வழிமுறை என்றார் ஜெயக்குமார்.
தமிழகத்தை வஞ்சிக்கும் எண்ணம் பாஜக.,வுக்கு இல்லை: தண்டோரா போடும் தமிழிசை
தமிழகத்தை வஞ்சிக்கும் எண்ணம் பாஜக.,வுக்கு சிறிதளவும் இல்லை என பாஜக., தமிழகத் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.
விருகம்பாக்கம் ஐஓபி., வங்கி கொள்ளையன் நேபாளத்தில் சிக்கினான்!
இந்நிலையில் நேபாளத்தில் பதுங்கி இருந்த கொள்ளையன் சபிலால் என்பவனை போலீசார் கைது செய்தனர். நேபாளத்தில் பதுங்கி இருந்த சபிலாலை, சர்வதேச போலீசார் இண்டர்போல் உதவியுடன் கைது செய்தனர்.
திருவாமாத்தூரில் தேர்த் திருவிழா கோலாகலம்!
தொடர்ந்து பஞ்சமூர்த்திகளும் தேரில் அலங்கரிக்கப்பட்டு தேரின் நான்கு சக்கரங்களுக்கும் பூஜைகள் செய்விக்கப்பட்டு தேரினை பராமரிக்கும் நபர்களுக்கும் பரிவட்டம் கட்டப்பட்டு சுமார் 8 மணியளவில் தேர் பொதுமக்கள் அரோகரா, அண்ணாமலையாருக்கு அரோகரா போன்ற கோஷங்கள் எழுப்பப்பட்டு இழுக்கப்பட்டது.
தொழிலாளியின் வீட்டில் குவியல் குவியலாய்… முட்டைகளில் நெளிந்து வெளிவந்த பாம்புகள்: அச்சத்தில் அலறிய மக்கள்!
பாம்பு முட்டைகள் அனைத்தும் கொத்துக் கொத்தாக ஒன்றுடன் ஒன்று ஒட்டிக் கொண்டு நச நசவென்று கூழ் போல் ஒட்டும் தன்மையுடன் இருந்தன. இவ்வாறு அங்கிருந்து அள்ளப் பட்ட பாம்புக் குட்டிகள் எந்த வகையைச் சேர்ந்தவை என்பது உடனடியாகத் தெரியவில்லை.
வாரியம் வருமென்றால் ராஜினாமா செய்வேன் என்று பேசிக் கொண்டிருக்க மாட்டேன்; எழுதிக் கொடுப்பேன்: பொன்.ராதாகிருஷ்ணன்
எல்லா நாடாளுமன்ற உறுப்பினர்களும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று சொன்னார்கள். பிறகு தி.மு.க. உறுப்பினர்கள் ராஜினாமா செய்யப் போவதாக சொன்னார்கள். எதுவும் நடக்கவில்லை. ஏன் விவசாயிகளை இப்படி ஏமாற்ற வேண்டும்?
பரபரப்பான சூழலில் சென்னை வருகிறார் மோடி: அதிகாரிகள் ஆலோசனை!
இதற்கிடையே, ஜெயலலிதா நினைவு மண்டபத்துக்கான அடிக்கல் நாட்டு விழாவும் சேர்த்து வைக்கலாம் என்றும் தமிழக அரசின் சார்பில் பிரதமர் மோடியிடம் அனுமதி கோரப் பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.