கூட்டுறவு தேர்தலில் ஆளும் கட்சி அராஜகத்தில் ஈடுபடுவதாக மார்க். கம்யூ. புகார்
மாநிலம் முழுவதும் நடைபெறும் இத்தகைய அத்துமீறல்களை, அராஜகத்தை தடுத்து நிறுத்த உறுதியான நடவடிக்கை எடுத்திட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கூட்டுறவு சங்க தேர்தல் ஆணையத்தையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறது. - என்று கே. பாலகிருஷ்ணன் அந்த அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஸ்டெர்லைட் விவகாரத்தில் மக்களுக்கு எதிராக அரசு செயல்படாது: பாண்டியராஜன்
சென்னை அடுத்த ஆவடியில் செய்தியாளர்களுடன் பேசிய அவரிடம், செய்தியாளர்கள் ஸ்டெர்லைட் ஆலை குறித்து கேள்வி எழுப்பினர். அப்போது அவர், மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டிருப்பதாகவும், ஸ்டெர்லைட் விவகாரத்தில் மக்களுக்கு எதிராக அரசு செயல்படாது என்றும் அமைச்சர் பாண்டியராஜன் கூறினார்.
நடிகர் பிரசாந்தின் முன்னாள் மனைவி வீட்டில் துணிகரத் திருட்டு: 170 சவரன் நகை பணம் கொள்ளை
தொடர்ந்து கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. திருடு போன வீட்டிலும் அருகிலுள்ள வீடுகளிலும் இருக்கும் கண்காணிப்பு கேமராக்கள் குறித்து போலீஸார் விசாரித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
போக்குவரத்துத் தொழிலாளருக்கு 2.44 காரணி ஊதிய உயர்வு நியாயமானதே! : நீதிபதி அறிக்கை!
அந்த அறிக்கையில், போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு அரசு அறிவித்த 2.44 காரணி ஊதிய உயர்வு நியாயமானதுதான் என்று கூறப்பட்டுள்ளது. இதையடுத்து, பத்மநாபன் அறிக்கை நகலை மனுதாரர், தொழிற்சங்கங்கள், அரசுத் தரப்பு அனைவரும் பதிவுத்துறை மூலம் பெற்றுக்கொள்ள நீதிபதிகள் உத்தரவிட்டனர். பின்னர், இந்த வழக்கின் விசாரணையை 4 வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்.
‘உயிருக்கு உயிராய்’ காதலித்து, செல்போன் சந்தேகத்தில் காதலி உயிரை எடுக்க பிளேடு போட்ட ‘காதலன்’ கைது!
"பிரகாஷும் இந்துவும் காதலித்துள்ளனர். இந்து மீது ஏற்பட்ட சந்தேகத்தால், அவரை பிளேடால் கிழித்ததாக பிரகாஷ் கூறியுள்ளார். இந்துவை கொலை செய்ய முயன்ற குற்றத்துக்காக பிரகாஷை கைது செய்துள்ளோம். நல்லவேளையாக,
ஆறுமுகசாமி ஆணையத்தில் அரசு மருத்துவர்களிடம் சசிகலா தரப்பு குறுக்கு விசாரணை
அதற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி குறைந்தது இரண்டு மருத்துவர் களையாவது இன்று விசாரணை செய்யவேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தார். அதன்படி இன்று சென்னை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் நாராயண பாபு, முன்னாள் மருத்துவக் கல்வி இயக்குநர் விமலா ஆகியோரிடம் சசிகலா தரப்பு வழக்கறிஞர்கள் குறுக்கு விசாரணை செய்து வருகின்றனர்.
மோடிக்கு கண்மூடித்தன ஆதரவு ஏன் பெருகுகிறது?: பத்திரிகையாளர் மாலன் கண்டறிந்த உண்மை!
அதில் அவர் கூறியபடி... இஸ்லாமிய, கிறுஸ்தவ அடிப்படைவாத அஜெண்டாவால்தான் இந்துத்துவம் வேகமாக எதிர்வினையாற்றுகிறது. அதனால்தான் ஒரு சராசரி இந்துக்கூட மோடியின் பக்தனாகிறான்" என்கிறார் தாமரை.//
கருணை இல்லத்தில் இருந்து அரசு அழைத்துச் சென்றவர்களை மீண்டும் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவு
பாலேஸ்வரம் கருணை இல்லத்திலிருந்து அரசு அழைத்துச் சென்ற 294 முதியவர்களில், உயிரோடு உள்ள 282 பேரை மீண்டும் கருணை இல்லத்தில் இன்றே ஒப்படைக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அரசு அதிகாரிகளால் அழைத்துச் செல்லப்பட்ட முதியோர்களை மீட்டுத்தரக் கோரி, காஞ்சிபுரம் மாவட்டம் பாலேஸ்வரம் புனித ஜோசப் கருணை இல்ல நிர்வாகி தாமஸ் உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.
ஜெயலலிதா மரணம் தொடர்பில் சுகாதார செயலர் விசாரிக்கப் பட வேண்டும்! : சசிகலா தரப்பு
சசிகலா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரங்கள் குறித்த விவரங்கள் தொடர்பில், பத்திரிகைகளில் வந்த செய்திகள் அனைத்தும் உண்மைதான் என்று கூறிய அவர், அதனை யாராவது மறுத்தால் எழுத்து பூர்வமாகப் பெற்று வெளியிட வேண்டும் என்று கூறி செய்தியாளர்களிடம் வாக்குவாதம் செய்தார்.
ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து ஊழலை ஒழிக்கும் லோக் ஆயுக்தவுக்குதான்! : கமல் உறுதி
நம் மாணவர்கள் என்ன படிக்க வேண்டும் என்பதை தமிழக அரசுதான் தீர்மானிக்க வேண்டும். அந்த உரிமை தமிழக அரசுக்கு வர வேண்டும்; நான் ஆட்சிக்கு வந்தால், எனது முதல் கையெழுத்து, லோக் ஆயுக்தவுக்குதான் இருக்கும் என்றார் மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல ஹாசன்.
ஆய்வு, துணை வேந்தர் நியமனம் என பிரச்னைகள் குறித்து மு.க.ஸ்டாலினிடம் ஆளுநர் விளக்கம்!
மாவட்டங்கள் தோறும் ஆளுநர் நடத்தும் ஆய்வு குறித்தும், சட்டப் பல்கலைக்கழகத்துக்கு நியமிக்கப் பட்ட துணைவேந்தர் நியமன விவகாரம் குறித்தும், ஆளுநரின் அழைப்பின் பேரில் சென்று சந்தித்த தம்மிடம், ஆளுநர் பன்வாரிலால் விளக்கம் அளித்திருப்பதாக மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
வைரலகும் மணப்பெண் -கல்யாணம் ஆனா மறுநாளே போராட வந்த மணப்பெண்
வாட்ஸ்அப்பில் ஒரு தகவல் மட்டும் முதலில் ஒரு தகவல் மட்டும் வருகிறது ,அந்த தகவல் என்னவென்றால் தூத்துக்குடி மக்கள் நலனுக்காக புதுப்பெண் போராட்டம் ,திருமணம் ஆனா மறுநாளே மக்களுக்காக களமிறங்கினார் ,நாம்...