Breaking News
ஓ.பி.எஸ்.ஸுக்கு ஏன் ஆதரவு: வீணை காயத்ரி விளக்கம்
மக்களுக்கு நல்லது நடக்க வேண்டுமானால் ஓபிஎஸ்தான் முதல் வராக வேண்டும். இதன் அடிப் படையில்தான் அவருக்கு என் வாழ்த்துகளை தெரிவித்துவிட்டு வந்தேன்.
பன்னீர்செல்வம் ராஜினாமா கடிதம்: ஆளுநர் ஏற்றதில் தொடரும் சிக்கல்
பன்னீர்செல்வம் ராஜினாமா செய்ததாக, வெளியான கடிதத்தில், 'பேக்ஸ்' நேரம், 7:22 மணி என்றும், தேதி, ஜன., 1, 2013 என்றும் தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, கடிதத்தை, ஆளுநர் ஏற்க முடியாத நிலை உள்ளதாக ஆளுநர் மாளிகை வட்டாரம் கூறுகிறது.
சசிகலா ஆட்சியமைக்க அழைக்க இயலாது: ஆளுநர் அறிக்கை?
அதிமுக, எம்.எல்.ஏ.,க்கள் சிறை வைக்கப்பட்டுள்ளனரா, அவர்களில் சூழல் என்ன என்பது குறித்து விசாரணை நடத்துமாறு தமிழக டி.ஜி.பி.,க்கு உத்தரவிட்டுள்ளேன்.
பன்னீர்செல்வம் குறித்து ஜெயலலிதாவின் கருத்து!
சென்னை:தற்போதைய முதல்வராக இருந்துவரும் ஓ.பன்னீர்செல்வம் குறித்து, அதிமுக., பொதுச் செயலராக இருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, ஓர் இக்கட்டான தருணத்தில் எப்படி விசுவாசமாக நடந்து கொண்டார் என்றும், தாம் அவரைப் போன்ற தொண்டரைப்...
சசிகலாவால் ராஜினாமா; மனம் திறந்தார் பன்னீர்செல்வம்: தனியாகப் போராட சூளுரை
ஒட்டு மொத்த நாடும் அ.தி.மு.க., மீது தவறான எண்ணம் ஏற்பட்டுவிடும் என எண்ணி, என்னால் எந்த பங்கமும் ஏற்படக்கூடாது என்று அமைதியாக இருந்தேன். எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் கூட்டப்பட்டதே எனக்கு தெரியாது. சசிகலாவை முதல்வராக்க கட்டாயப்படுத்தினர். என்னை கட்டாயப்படுத்தியதால் நான் ராஜினாமா செய்தேன். தமிழகத்தை காக்க தன்னந்தனியே போராடுவேன்
அதிர்ச்சியில் அலறிய சசிகலா: பி.எச். பாண்டியனுக்கு பண்ருட்டி ராமச்சந்திரன் பதில்
அதிமுக சட்டங்களை உருவாக்கிய குழுவில் பி.எச்.பாண்டியன் இருந்தது உண்மைதான். ஆனால் எம்.ஜி.ஆர் ஏன் அப்படி ஒரு ரூல்ஸ் உருவாக்கினார் என்பது எம்.ஜி.ஆருடன் இருந்த எனக்குத்தான் தெரியும்
விஷம் வைத்துக் கொல்லப்படுவோம் என அஞ்சினார் ஜெயலலிதா: மனோஜ் பாண்டியன் பகீர்
மக்கள் அனைவரின் விருப்பத்துக்கு மாறாக நடக்கிறது. தொண்டர்களை வஞ்சித்தும் நடக்கிறது. பொருளாதாரக் குற்றங்கள் செய்தவர்கள் நாடாண்டால் என்னாகும். இவர்கள் முதல்வராக தமிழகத்தை எங்கே கொண்டு செல்வார்கள்.
ஜெயலலிதாவுக்கு அப்பல்லோவில் நடந்தது என்ன?: மௌனம் கலைத்த பி.எச். பாண்டியன்
2011ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சிப் பொறுப்பை ஏற்றதும் எனக்கு எதிராக சதி செய்கிறார்கள் என்று கூறி யாரை எல்லாம் வெளியே அனுப்பினாரோ, அவர்கள் எல்லாம் அங்கே நின்று கொண்டிருந்தார். இதைப் பார்த்து கடுமையாக அதிர்ச்சி அடைந்தேன்
சசிகலா குழு நாடகத்தை மக்கள் நம்ப மாட்டார்கள்: ராமதாஸ்
இதற்குக் காரணமானவர்களை தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள். தங்களை நல்லவர்களாக காட்டிக்கொள்ள நடத்தப்படும் நாடகங்களையும் நம்பமாட்டார்கள்.
தனியார் பால் மறைமுக விலையேற்றத்தை தடுக்க முகவர் சங்க நிறுவனர் கோரிக்கை
இல்லையெனில் தனியார் பால் நிறுவனங்கள் ஒவ்வொன்றும் தன்னிச்சையான முறையில் பால் மற்றும் தயிருக்கான விற்பனை விலையை மறைமுகமாக உயர்த்த தொடங்கி பொதுமக்கள் மீது பாரத்தை சுமத்தத் தொடங்கி விடுவார்கள்
ஜெயலலிதாவின் உடல் பதப்படுத்தப் பட்டது உண்மை: டாக்டர் சுதா சேஷய்யன்
எம்.ஜி.ஆரின் உடலும் பதப்படுத்தப்பட்டது. எம்.ஜி.ஆரின் உடலை பதப்படுத்திய அதே எம்.எம்.சி. அனாட்டமி பிரிவினர்தான் ஜெயலலிதாவின் உடலையும் பதப்படுத்தினார்கள்.
தேனிக்காரரை துரத்திவிட்டு ஆண்டிப்பட்டியில் அடியெடுத்து வைக்கவா?
தேனி மாவட்டத்துக்காரரான ஓ,பன்னீர்செல்வத்தை முதல்வர் பதவியில் இருந்து துரத்தி விட்டு, சசிகலா அங்கே போட்டியிட்டால் மாவட்டத்துக்காரர்களின் கோபத்தை சந்திக்க நேரிடும் என்றும் கட்சியினர் மத்தியில் பேசப்படுகிறது.