
அன்னை இன்ப்ரா டெவலப்பர் என்ற நிறுவனத்தில் வருமான வரி சோதனை
ஈரோடு அருகே தனியார் நிறுவனத்தில் வருமான வரிதுறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
பெருந்துறையை சேர்ந்த அசோக்குமார் என்பவருக்கு சொந்தமான அன்னை இன்ப்ரா டெவலப்பர் என்ற நிறுவனம் கட்டுமானம் மற்றும் குடிநீர் குழாய் பதிப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், இந்த நிறுவனம் அரசுப்பணிகளில் சுமார் 450 கோடி ரூபாய் வரை வரி ஏய்ப்பு செய்ததாக வந்த புகாரை அடுத்து, கடந்த சில நாட்களுக்கு முன் அசோக்குமார் விசாகப்பட்டினத்தில் கைது செய்யப்பட்டார்.
இதனையடுத்து, ஈரோடு பெருந்துறை சாலையில் உள்ள அன்னை இன்ப்ரா டெவலப்பர் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் மற்றும் சிப்காட்டில் உள்ள அலுவலகம், அசோக்குமாருக்கு சொந்தமான வீடு உள்ளிட்ட இடங்களிலும் 10க்கும் மேற்பட்ட வருவமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
நள்ளிரவு 12 மணி வரை நடைபெற்ற இச்சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று காலையில் 2வது நாளாக அங்கு சோதனை நடத்த வருமான வரித்துறை முடிவு செய்துள்ளது.



