
வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது வோடஃபோன்!
நேற்று வோடாஃபோன் இந்தியச் சந்தையிலிருந்து விலகுவதாக தகவல்கள் வெளியாகின. இது முற்றிலும் தவறான செய்தி என்று நிராகரித்திருக்கிறது வோடாஃபோன் குழுமம்.
செய்தி நிறுவனம் வெளியிட்ட இதுகுறித்த செய்தி நேற்று வைரலானது. ‘இது எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் பரப்பப்படும் வதந்திதான்’ என்று இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது அந்த நிறுவனம்.
மேலும், இந்தியச் சந்தையில் அரசுடன் தொடர்ந்து பணியாற்றுவதாகவும் தங்களுடைய வோடாஃபோன்-ஐடியா கூட்டணி தொடரும் என்றும் அறிவித்திருக்கிறது.



