
மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் பகுதிகளில் மழை இல்லாததால் குற்றாலம் மெயினருவியில் நீர் வரத்து குறைந்ததைத் தொடர்ந்து 4 நாட்களுக்கு பின்னர் ஓரத்தில் நின்று குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மாவட்டம் நெல்லை மாவட்டம் குற்றாலம் தென்காசி செங்கோட்டை ஆகிய பகுதிகளில் கடந்த இரு நாள்களாக மழை பொழிவு குறைந்தது
கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து இருந்த நிலையில் கடந்த இரு நாள்களாக மழை அளவு படிப்படியாக குறைந்து
நேற்று மழை இல்லை இந்த நிலையில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் நீர்வரத்து குறைந்தது இதையடுத்து குற்றாலம் அருவிக்கு வரும் நீர் அளவு குறைந்தது தொடர்ந்து அருவிகளில் பாதுகாப்பான அளவில் நீர் விழுந்தது இதனால் சுற்றுலா பயணிகள் அருவியில் ஒரு ஓரமாக நின்று குளிப்பதற்கு போலீசார் அனுமதித்தனர்
மெயினருவியில் பாதுகாப்பு வளைவை ஒட்டி உள்ள பகுதியில் அதிக அளவில் நீர் விழுந்ததால் அந்த பகுதியில் மட்டும் தடை செய்தனர்
முன்னதாக ஐந்தருவியில் கடந்த இரு நாட்களாக சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு போலீசார் அனுமதி அளித்திருந்தனர்



