
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று கொரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் மற்றும் 238.40 கோடி மதிப்பீட்டில் முடிக்கப்பட்ட புதிய திட்டங்கள் திறப்பு ஆகியவை நடைபெற்றது.
சேலத்தில் இருந்து கார் மூலம் கோவை வந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் கீழ் தளத்தில் , தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் 166 கோடி மதப்பீட்டில் பில்லூர் 3 வது குடிநீர் அபிவிருத்தி திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
பின்னர் கோவை மாவட்டத்தில் கபசுர குடிநீர் , ஜிங்க் மாத்திரை , வைட்டமின் மாத்திரைகள் அடங்கிய நோய் எதிர்ப்பு சக்தி பெட்ட்கத்தை பத்து லட்சம் குடும்பங்களுக்கு வழங்கும் திட்டத்தையும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி துவக்கி வைத்தார். பின்னர் நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, கூட்ட அரங்கில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
மேலும் கோவை உக்கடம் பெரிய குளத்தில் 39.74கோடி மதிப்பீடடில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் குளத்தின் ஒரு பகுதியில் செய்து முடிக்கப்பட்ட பணிகள், வாலாங்குளத்தின் ஒரு பகுதியில் 25.83 கோடி ரூபாயில் செய்யப்பட்ட பணியிகள் ஆகியவற்றை வீடியோ கான்பிரசிங் முறையில் திறந்து வைத்தார்.
மேலும் 2.85 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட அன்னூர் வட்டாச்சியர் அலுவலகம் மற்றும் குடியிருப்பு கட்டிடங்களை வீடியோ கான்பிரசிங் முறையில் திறந்து வைக்கப்பட்டது.
இதே போல் 60 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட செட்டிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்,2.70 கோடி மதிப்பீட்டில் பொள்ளாச்சி வடக்கு ஊராட்சி ஒன்றியத்திற்கு கட்டப்பட்ட கட்டிடம் ஆகியவையும் வீடியோ கான்பிரசிங் முறையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்.
பின்னர் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மற்றும் மாவட்ட அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனையில் ஈடுபட்டார்.
இதனையடுத்து கோவையில் உள்ள கொடிசியா, இந்திய தொழில் வர்த்தக சபை, சைமா, சிஸ்பா உட்பட 15 தொழில் அமைப்பை சேர்ந்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். கொரொனாவால் ஏற்பட்ட தொழில் நெருக்கடி, மின் கட்டணம் உட்பட தொழில் முனைவோருக்கு இருக்கும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து தொழில் அமைப்பு நிர்வாகிகள் முதல்வரிடம் தெரிவித்தனர். இதனையடுத்து விவசாயிகள் சங்க பிரதிநிதிகளுடனும் முதல்வர் ஆலோசனை மேற்கொண்டார்.