2019 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும். மோடி பிரதமராக பதவியேற்பதில் தமிழகம் முக்கியப் பங்கு வகிக்கும் என திருப்பூரில் பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் செய்தியாளர்களிடம் பேசிய போது குறிப்பிட்டார்.
பிப்ரவரி 10 ஆம் தேதி திருப்பூர் பெருமாநல்லூர் பகுதியில் நடைபெற வுள்ள பொதுக்கூட்டத்தில் பாஜக பிரதமர் மோடி பங்கேற்றுப் பேசவுள்ளனர். இந்தப் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ள இடத்திற்கான கால்கோள் விழா திருப்பூர் பெருமாநல்லூர் பகுதியில் உள்ள வாஜ்பாய் திடலில் நடைபெற்றது .
இதில் கலந்துகொண்டு செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன், மோடியின் ஆட்சி வளர்ச்சியின் ஆட்சி எனவும், வாக்கு சாவடி அளவிற்கு பலம் பொருந்தியவர்களாக மாறி வருகிறோம்.
அதனால்தான் மீண்டும் மோடி வேண்டும் மோடி என்ற கருத்தை வலியுறுத்துகிறோம். நான்கரை ஆண்டுகளில் மோடியின் சாதனை அளப்பரியது. பொய் வாக்குறுதிகளை காங்கிரஸ் வழங்கி வருகிறது. ராகுல், பிரியங்கா என யார் வந்தாலும் மோடியை அசைக்க முடியாது.
ஸ்டாலின் நிலை தடுமாறி பேசுகிறார். ஆறுமுகசாமி ஆணையத்தில் மோடியை விசாரிக்க சொல்கிறார். எதை பேசுகிறோம் என்று ஸ்டாலினுக்கு தெரியவில்லை.
எய்ம்ஸ் மருத்துவமனைக்காக மத்திய அமைச்சரவை 1300 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 48 மாதத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை தமிழகத்தில் இயங்கும் . ஸ்டாலின் வரம்பு மீறி பேசுகிறார். அனைத்து மாவட்டங்களிலும் மத்திய அரசின் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
ஆசிரியர்கள் பணிக்கு திரும்புவதே நல்லது. எதிர்கட்சிகள் மாற்று சக்திகளை போராட தூண்டப்படக்கூடாது. போராடுபவர்கள் தமிழகத்தின் வளர்ச்சியை கருத்தில் கொள்ள வேண்டும்.திருநாவுக்கரசர் நப்பாசையில் உள்ளார்.
நாங்கள் விட்டுக் கொடுத்து வாங்கும் நிலமையில் தான் காங்கிரஸ் கட்சி உள்ளது. பிரதமர் வேட்பாளர் பலம் பொருந்தியவர். கூட்டணி பேச்சுவார்த்தை இன்னும் ஆரம்பிக்க வில்லை அதற்குள்ளாக சிலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள் என பேட்டியளித்தார்.
இந்நிகழ்ச்சியில் கட்சியின் மாநில மாவட்ட நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.